சிபிஎம் மத்தியக் குழு உறுப்பினர் யூசுப் தாரிகாமி
லடாக்கில் நடந்தது எதுவாக இருந்தாலும் அது வருந்தத்தக்கது தான். ஆனால் இந்த போராட்டம் மற்றும் வன்முறை 2019-க்கு முன்பே தொடங்கியது. காரணம் அப்போது 370ஆவது பிரிவு நீக்கப்பட்டு இந்திய அரசியலமைப்புக்கே தாக்குதல் நடத்தப்பட்டது.
காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் சுப்ரியா
பாஜக அரசுகள் வாக்கு திருட்டு என்றாலே மிரளுகின்றன. பிரதமர் மோடியின் தொகுதியான வாரணாசியில் (உ.பி.,யில்) மக்கள் மன்றம் ஒன்று நடைபெற்றது. இதில் வாக்கு திருட்டு பற்றி பேசுவார்கள் என்று அச்சமடைந்த மாவட்ட நிர்வாகம், மக்கள் மன்றத்திற்கு அனுமதி மறுத்தது. நிகழ்ச்சி செயற்பாட்டாளர்களை வீட்டுக்காவல் போன்று கண்காணிப்பில் வைத்தது.
மூத்த பத்திரிகையாளர் ராணா அய்யூப்
நாட்டில் சாதாரணமாக முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்புப் பேச்சுக்கள் வெளிப்பட்ட காலத்தில் நீதித்துறை, ஊடகங்கள் மற்றும் அறிவுஜீவிகள் ஆகியோர் மவுனமாக இருந்தனர். ஆனால் தற்போது முஸ்லிம் மக்களுக்கு எதிராக இனப் பாகுபாடு சாதாரணமான விசயமாக்கப்பட்டுள்ளது. எப்போதெல்லாம் ஒரு இந்து மத பண்டிகை வருகிறதோ, அப்போதெல்லாம் முஸ்லிம் மக்களுக்கு எதிராக வெறுப்புப் பேச்சு மற்றும் வன்முறை வெடிக்கிறது.
சிவசேனா (உத்தவ்) மூத்த தலைவர் சஞ்சய் ராவத்
கிரிக்கெட் போட்டிகள் ஏற்பாடு செய்வ தை விட மகாராஷ்டிரா பாஜக கூட்டணி அரசு வெள்ளப் பாதிப்புக்குள்ளான பகுதிகளில் அதிக கவனம் செலுத்த வேண்டும். மாநிலம் வெள்ளத்தில் தத்தளித்து வருகிறது. கிரிக்கெட்டை விட மக்கள் வாழ்வு தான் முக்கியம்.
