states

img

சமர்த் ராம்தாஸ் இல்லாமல் சத்ரபதி சிவாஜி இல்லை!

மும்பை, மார்ச் 1- சமர்த் ராம்தாஸ் இல்லாமல் சத்ரபதி சிவாஜி இல்லை என்று மகாராஷ்டிர ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி பேசியுள்ளார். இதற்கு அம்மாநிலத்தில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. அவுரங்காபாத்தில் நடை பெற்ற நிகழ்ச்சி ஒன்றில், மகா ராஷ்டிர ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரி பேசுகையில், “சாணக்கியர் இல்லாமல் சந்திர குப்தர் இல்லை; சமர்த் ராம்தாஸ் இல்லாமல் சத்திரபதி சிவாஜி இல்லை. நான் சந்திரகுப்தர், சிவாஜியின் திறமையை குறைத்து மதிப்பிடவில்லை. அதே நேரத்தில் தாய்க்கு நிகரா னவர் குரு!” என்று கூறியுள் ளார். அவருடைய இந்த பேச் சுக்குத்தான், சிவசேனா, தேசிய வாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். சத்ரபதி சிவாஜியின் பரம்பரை யைச் சேர்ந்த, பாஜக எம்.பி. உதயன்ராஜே போஷ்லேவும் கோஷ்யாரிக்கு கண்டனம் தெரி வித்துள்ளார். “ராஷ்டிரமாதா ஜீஜா-தான்,  சிவாஜியின் குரு. சமர்த் ராம்தா சுக்கும், சிவாஜிக்கும் எந்தத்  தொடர்பும் இல்லை. ஆளுந ரின் பேச்சு, மகாராஷ்டிர மக்க ளின் உணர்வுகளைப் புண் படுத்தி இருக்கிறது’’ என்று  அவர் காட்டமாக குறிப்பிட்டுள் ளார்.