states

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி

பஹல்காமில் கொடூரமான பயங்கரவாதத் தாக்கு தல் திட்டமிடப்பட்டிருப்பதை உளவுத்துறை ஏன் கண்டறியவில்லை? இதற்கு பொறுப்பேற்று உள்துறை அமைச்சர் அமித் ஷா ஏன் ராஜினாமா செய்ய வில்லை?பாகிஸ்தானுக்கு சரணடைவதைத் தவிர வேறு வழியில்லை என்றால், இந்தப் போர் ஏன் நின்றது? அமெரிக்க ஜனாதிபதி ஏன் போர் நிறுத்தத்தை அறிவித்தார்?

ஜேஎம்எம் எம்.பி., விஜய் குமார் ஹன்ஸ்டாக்

ஒன்றிய அரசே! பெருமை, விளம்பரத்திற்காக நமது ராணுவத்தை பலவீனப்படுத்துவதை நிறுத்துங்கள். நமது உளவுத்துறையை வலுப் படுத்த வேண்டிய அவசியம் உள்ளது. பயங்கரவாதிகள் நாட்டிற்குள் எப்படி நுழைந் தார்கள்? முதலில் இதற்கு பொறுப்பேற்கும் விசயங்களை மேற்கொள்ளுங்கள்.

திமுக எம்.பி., ஆ.ராசா

பஹல்காம் தாக்குதல் ஒன்றிய பாஜக அரசின் நிர்வாகத் தோல்வியாக அமைந்துள்ளது. பஹல்காம் தாக்குதல் விவகாரத்தில் ஜி7, ஜி20 போன்ற அமைப்பின் நாடுகள் குறைந்தபட்சம் பாகிஸ்தான் தீவிரவாதத்தை கண்டிக்கவில்லை. இந்தியா - பாகிஸ்தான் மோதலை அமெரிக்கா நிறுத்தியதாக கூறியது வெட்கக்கேடானது. 

திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி., சாகேத் கோகலே

உச்சநீதிமன்ற கொலீஜியம், ஆர்த்தி சாத்தே என்கிற வழக்கறிஞரை மும்பை உயர்நீதிமன்ற நீதிபதி பொறுப்புக்கு பரிந்துரை செய்திருக்கிறது. சுவாரஸ்யம் என்னவென்றால், மகாராஷ்டிரா பாஜகவின் செய்தித் தொடர்பாளராகவும் ஒரு வழக்கறிஞர் ஆர்த்தி சாத்தே என்கிற பெயரில் இருக்கிறார்.