காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ்
வெளிநாட்டு பயணத்தை முடித்துக்கொண்டு நாடு திரும்பியுள்ள பிரதமர் மோடியை இந்தியா வரவேற்கிறது. வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ள மணிப்பூர் மாநிலம், கடந்த 2 ஆண்டுகளாக பிரதமர் மோடியை எதிர்பார்த்து காத்திருக்கிறது. வெளிநாட்டில் இருந்து இந்தியா வந்துள்ள பிரதமர் மோடி, தற்போதாவது சிறிது நேரம் ஒதுக்கி, மணிப்பூருக்கு செல்வாரா?
சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே
மகாராஷ்டிரா அரசின் சிறப்பு பொது பாதுகாப்பு மசோதா மக்களின் பாதுகாப்பிற்காக அல்ல, பாஜகவின் பாதுகாப்பிற்காக கொண்டு வரப்பட்டுள்ளது. இதனை மக்கள் ஏற்க மாட்டார்கள்.
பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான்
நாட்டின் வெளியுறவுக் கொள்கைகள் மற்றும் வெளிநாட்டு புறப்பாடு, வருகைகள் குறித்து கேள்வி கேட்க எனக்கு உரிமை இல்லையா? இல்லை என்றால், பிரதமர் மோடி இங்குள்ள 140 கோடி மக்களிடம் பேச வேண்டும். ஒவ்வொரு வெளிநாட்டு பயணத்தின் போது மக்களுக்கு விளக்கம் அளிக்க வேண்டும்.
திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி., சாகேத் கோகலே
உலக நாடுகள் மோடிக்கு கொடுக்கும் உயரிய விருதுகளால் உங்களுக்கு பயன் இருக்கிறதா? கடந்த 9 வருடங்களில், 26 நாடுகளிடமிருந்து மோடி விருது பெற்றிருக்கிறார். ஆனால் இந்தியர்களின் விசா விதிகளை எளிமையாக கொண்டிருப்பது வெறும் 10 நாடுகள்தான். அவையும் கூட, மோடி ஆட்சிக்கு முன்பிருந்தே எளிய விதிகள் கொண்டிருந்தன என்பது முக்கியமான விஷயம் ஆகும்.