நொய்டா, பிப்.17- இந்தி, போஜ்புரி, தெலுங்கு படங்க ளில் நடித்திருப்பவர், பாலிவுட் நடிகர் ரவி கிஷன். இவர் உத்தரப் பிரதேச மாநில பாஜக மக்களவை உறுப்பினராகவும் இருக்கிறார். இந்நிலையில், ரவி கிஷன் மீது காங்கி ரஸ் கட்சியின் நட்சத்திர பேச்சாளர்களில் ஒருவரான பங்குரி பதக், நொய்டா காவல் துறையில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், “நொய்டாவில் நடந்த வாக்குப் பதிவுக்கு அடுத்த நாள், எனக்கு எதிராக நூற்றுக்கணக்கான டுவிட்டர் கணக்கு களில் இருந்து ஆபாசமான கருத்துக்கள், மார்பிங் செய்யப்பட்ட புகைப்படங்கள் வெளியாகின. எனக்கு எதிராக ஆன் லைனில் பாலியல் ரீதியாக துன்புறுத்தல் அதிகரித்ததால், அந்த கணக்குகளை நீக்கினேன். அவற்றில், பாஜக எம்.பி. ரவி கிஷன் பெயரில் உள்ள கணக்கில் இருந் தும் மார்பிங் செய்யப்பட்ட ஆபாசப் படங்கள் வெளியாகின. இந்த பதிவைப் நீக்க வேண்டுமானால் ரூ. 1 லட்சம் கொடுக்க வேண்டும் என்று மிரட்டலும் விடுக்கப்பட்டது. பாஜக ‘ஐடி செல்’ நடத்தும் இதுபோன்ற போலிக் கணக்குகள் மூலம் ஆயிரக்கணக்கான இந்திய பெண்கள் பாலியல் ரீதியாக துன்புறுத்தலை எதிர் கொள்கின்றனர். எனவே, எனக்கு எதிராக பரப்பப்படும் ஆபாச பதிவுகளை நீக்க வேண்டும். சம்பந்தப்பட்டவர்கள் மீது நட வடிக்கை எடுக்க வேண்டும்’ என்று வலி யுறுத்தியுள்ளார்.