ராஜஸ்தானில் இருமல் மருந்தால் குழந்தைகள் உயிரிழப்பு
பாஜக ஆளும் ராஜஸ்தானில், அரசால் இலவசமாக வழங் கப்பட்ட இருமல் மருந்து குடித்த 2 குழந்தைகள் அடுத்தடுத்து உயிரி ழந்தன. குறிப்பாக மருந்து மீது தவறு இல்லை என நிரூபிக்க, இதைக் குடித்த மருத்துவரும் சுயநினைவை இழந்துள் ளார். இந்த விவகாரம் பூதாகரமாக வெடிக்க, மருந்தை விநியோகிக்க மாநி லம் முழுவதும் தடை விதிக்கப்பட்டுள் ளது. மேலும் தயாரிப்பு நிறுவனம் மூடப் பட்டு, உரிமையாளர் தலைமறைவாக உள்ளதாகக் கூறப்படுகிறது. ஆனால் என்ன வகையான இருமல் மருந்து என இதுவரை அதிகாரப்பூர்வமாக தகவல்வெளியாக வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.