பாட்னா, டிச.14- பீகார் மாநிலம், அவுரங்கா பாத் மாவட்டத்திற்கு உட்பட்டது, தும்ரி கிராமம். இங்கு அண்மை யில் பஞ்சாயத்துத் தலைவர் தேர் தல் நடந்துள்ளது. இதில் பல்வந்த் சிங் சிங்கனா என்பவர் போட்டி யிட்டு தோல்வி அடைந்துள்ளார். இந்நிலையில், தனது தோல் விக்கு தும்ரி கிராமத்திலுள்ள தலித் மக்கள் வாக்களிக்காததே காரணம் என்ற முடிவுக்கு வந்த பல்வந்த் சிங், அவர்களைக் கடு மையாகத் தாக்கி சித்ரவதைக்கு உள்ளாக்கியுள்ளார். அனில் குமார், மஞ்சித் குமார் என்ற இரண்டு தலித் இளை ஞர்களை தோப்புக்கரணம் போடச் செய்ததுடன், எச்சிலைத் தரையில் துப்பி, அதை நாவால் சுத்தம் செய்யவும் வைத்துள் ளார். மேலும், தனது இந்த வன் முறை மற்றும் அராஜகத்தை பல்வந்த் சிங்கே வீடியோ எடுத்து சமூகவலைதளங்களில் பரப்பியுள்ளார்.
அந்த வீடியோவில் இளை ஞர்கள் இருவருக்கும் இழைக் கப்பட்ட வன்கொடுமை சித்ர வதைகள், காண்போர் மனதை அதிர்ச்சியில் உறைய வைப்ப தாக அமைந்துள்ளது. தான் வாங்கித்தந்த மதுவை குடித்து விட்டு வாக்களிக்காமல் ஏமாற்றி விட்டதாக பல்வந்த் சிங் பேசும் காட்சியும் அந்த வீடியோவில் இடம் பெற்றுள்ளது. இதையடுத்து, பல்வந்த் சிங் சிங்கானாவை அவுரங்காபாத் மாவட்ட காவல்துறையினர் தற்போது கைது செய்துள்ளனர். “பாதிக்கப்பட்டவர்களிடம் விசாரணை நடத்தினோம். அதில் அனில் குமார், மன்ஜித் குமார் ஆகியோர் அளித்த வாக்கு மூலத்தின் அடிப்படையில் பல் வந்த் சிங் சிங்கானாவைக் கைது செய்துள்ளோம். அவர் மீது விரை வில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும்” என்று அவுரங்கா பாத் மாவட்ட எஸ்.பி. கந்தேஷ் குமார் மிஸ்ரா தெரிவித்துள்ளார்.