பீகார் வாக்காளர் பட்டியல் திருத்தத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு
மகாராஷ்டிரா, ஹரியானா, ஒடிசா உள் ளிட்ட மாநிலங்களில் நடைபெற்ற சட்ட மன்ற தேர்தல்களில், தேர்தல் ஆணை யத்தின் உதவியால் வாக்காளர் நீக்கம், சேர்ப்பு உள்ளிட்ட நிகழ்வுகள் மூலம் பாஜக ஆட்சியை கைப் பற்றியதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ச்சியாக குற்றம் சாட்டி வருகின்றன. ஆதாரத்துடன் குற்றச்சாட்டுகள் அதிகம் கிளம்பியுள்ளதால், வாக்காளர் பட்டியல் மற்றும் வாக்குப்பதிவு அறைகளில் இருக்கும் சிசிடிவி தரவுகளை பெற தேர்தல் ஆணையம் விதிகளை மாற்றி அமைத்து கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இந்த கட்டுப்பாடுகள் மூலம் பாஜக - தேர்தல் ஆணையம் கூட்டு அம்பலமாகியுள்ளது. இந்நிலையில், இந்த ஆண்டு இறுதியில் நடைபெற உள்ள பீகார் சட்டமன்ற தேர்தலில் தேர்தல் ஆணையத்தின் உதவியோடும், மகா ராஷ்டிரா, ஹரியானா, ஒடிசாவில் நிகழ்த்தப்பட்டது போன்றும் சுமார் 2 கோடி வாக்காளர்களை நீக்க பாஜக திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி யுள்ளன. இதற்காகவே வாக்காளர் பட்டியலில் சிறப்பு திருத்தப் பணிகளை மேற்கொள்ள இந்திய தேர்தல் ஆணையம் தொடங்க உள்ளது. இத்த கைய சூழலில், பீகாரில் சட்டமன்ற தேர்தலை யொட்டி தேர்தல் ஆணையத்தின் வாக்காளர் பட்டிய லில் சிறப்பு திருத்த நடவடிக்கையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஜனநாயக சீர்திருத்த சங்கம் சார்பில் உச்சநீதி மன்றத்தில் தாக்கல் செய்திருக்கும் மனுவில், “தேர்தல் ஆணைய உத்தரவு தன்னிச்சையானது. இந்த நடவடிக்கை பல லட்சக்கணக்கான வாக்கா ளர்களின் வாக்குரிமையை பறிக்கக்கூடும். வாக்காளர்கள் பெரிய அளவில் நீக்கப்படலாம். அத னால் இதற்கு தடை உத்தரவை பிறப்பிக்க வேண்டும்” என அதில் கூறப்பட்டுள்ளது. இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது என செய்திகள் வெளியாகியுள்ளன. பீகாருக்கு மட்டும் ஏன் சிறப்பு அதிகாரம்? அரசியலமைப்பு சட்டப்பிரிவு 324, 1950-ஆம் ஆண்டின் மக்கள் பிரதிநிதித்துவ சட்டப் பிரிவு 21 ஆகியவற்றின் கீழ், தமக்குள்ள அதிகாரங்களை பயன்படுத்தி பீகார் தேர்தலில் வாக்காளர் பட்டி யல் சிறப்பு திருத்தப் பணிகளுக்குத் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தேர்தலை எதிர் கொள்ள உள்ள பீகாருக்கு மட்டும் ஏன் இந்த அதி காரங்களை தேர்தல் ஆணையம் பயன்படுத்து கிறது என்ற சந்தேகம் கிளம்பியுள்ளது.