states

img

ஒன்றிய அரசு அதிகாரிகள், போலிச் சாமியார்கள் மீது வழக்கு

ஒன்றிய அரசு அதிகாரிகள், போலிச் சாமியார்கள் மீது வழக்கு

மருத்துவக் கல்லூரி அனுமதியில் மிகப்பெரும் முறைகேடு

மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி வழங்குவதில் பெரும் முறை கேடு நடைபெற்றிருப்பது அம்பல மாகியுள்ளது. இது தொடர்பாக ஒன்றிய அரசு அதிகாரிகள், போலிச் சாமியார் உட்பட 34 பேர் மீது மத்தியப் புலனாய்வு அமைப்பு (சிபிஐ) வழக்குப்பதிவு செய்துள்ளது. மருத்துவக் கல்லூரி ஆய்வுக்கு வரும் அதிகாரிகளை கண்டறிந்து போலிச் சாமியார் ரவிசங்கர் சிங் அவர்களுக்கு லஞ்சம் கொடுத்துள்ளார். அனுமதி கடிதம் வாங்கிய பின், அனுமதியை பெற்ற மருத்துவக் கல்லூரியிடம் இருந்து கோடிக் கணக்கில் பணம் பெற்றுள்ளார் ரவிசங்கர். ஆய்வுக்கு வரும் அதிகாரிக ளின் விபரங்களை பெற முன்னாள் யுஜிசி தலைவர் டி.பி. சிங், ரவிசங்க ருக்கு உதவி செய்துள்ளார். டி.பி. சிங் மும்பை டாடா இன்ஸ்டிடி யூட் ஆப் சோஷியல் சயின்ஸ் பல்கலைக் கழகத்தில் வேந்தராக உள்ளார். ஆய்வு க்கு வரும் அதிகாரிகள் விவரத்தை பெற போலிச் சாமியார் ரவிசங்கர் ரூ.30 லட்சம் வரை லஞ்சம் தந்துள்ளார். ஆய்வின் போது ஆந்திராவிலிருந்து மருத்துவர்க ளை அழைத்துச் சென்று பேராசிரியர்க ளாக நடிக்க வைத்ததும் அம்பலமாகி யுள்ளது. மருத்துவக் கல்லூரிகளுக்கு அனு மதி வழங்கும் இந்த முறைகேடு சம்பவத் தில் ஒன்றிய அரசு அதிகாரிகள், போலிச் சாமியார்கள் என 34 பேர் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது.