புதுதில்லி, டிச.9- தில்லியில் உள்ள ரோகிணி மாவட்ட நீதிமன்ற வளாகத்தில், நீதிமன்ற அறை ஒன்றில் குண்டு வெடித்ததில் காவலர் ஒரு வருக்கு லேசான காயம் ஏற் பட்டது. வியாழனன்று காலை நீதி மன்ற அறை எண் 102 ல் லேப் டாப் பை ஒன்றில் வைக்கப் பட்டிருந்த குண்டுவெடித்தது. அதில் சுல்தான்புரி காவல் நிலைய கான்ஸ்டபிள் ராஜீவ் குமார் என்பவருக்கு லேசான காயம் ஏற்பட்டது. குண்டு வெடிப்பின் தாக்கத் தால் அறையின் தரைப்பகுதி யில் பள்ளம் ஏற்பட்டது. தக வல் அறிந்து 7 தீயணைப்பு வாகனங்களில் வீரர்கள் விரைந்தனர். தடயவியல் மற்றும் என்எஸ்ஜி பிரிவினர் குண்டு வெடித்த இடத்தில் ஆய்வு நடத்தினர்.