states

img

மேற்கு வங்க சட்டமன்றத்தில் இருந்து பாஜக எம்எல்ஏக்கள் வெளியேற்றம்

கொல்கத்தா மேற்கு வங்க மாநில சிறப்பு சட்டமன்ற கூட்டத் தொடர் செவ் வாய்க்கிழமை அன்று தொடங்கியது. இந்த கூட்டத்தொடரில் அசாம், ஒடிசா, மகாராஷ்டிரா, தில்லி, குஜராத் போன்ற பாஜக ஆளும் மாநிலங்க ளில் வங்காள மொழி பேசும் மக்கள் துன்புறுத்தப்படுவதாகக் கூறி சிறப்பு தீர்மானத்தை அம்மாநில சட்டமன்ற விவகாரத்துறை அமைச்சர் சோபன் தேவ் சட்டோபாத்யாய் முன்வைத் தார். இந்த தீர்மானம் தொடர்பான விவாதத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த பாஜக மூத்த தலைவரும், எதிர்க் கட்சித் தலைவருமான சுவேந்து அதி காரி முழு கூட்டத்தொடரில் இருந்தும் நீக்கப்பட்டார். இந்நிலையில், சட்டமன்ற கூட்டத் தொடரின் 3ஆவது நாளான வியா ழக்கிழமை அன்று தீர்மான விவாதத் தில் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி உரையாற்றினார்.

அப்போது அவர் பேசுகையில், “பாஜக ஒரு ஊழல்வாத கட்சி. வாக்குத் திருடர்களின் கட்சி. மிகப்பெரிய கொள்ளையர்களின் கட்சி. திரிணா முல் காங்கிரஸ் எம்.பி.,க்களை நாடாளுமன்றத்தில் இருந்து சிஐ எஸ்எப் வீரர்களைக் கொண்டு வெளி யேற்றிய கட்சி. அதனால் வங்காள எதிர்ப்பு பாஜகவை அகற்றி நாட்டைக் காப்பாற்றுவோம். என் வார்த்தைக ளைக் குறித்துவைத்துக் கொள்ளுங் கள், இந்த அவையில் ஒரு பாஜக எம்எல்ஏ கூட இல்லாத நாள் வரும். மக்கள் உங்களை அதிகாரத்தி லிருந்து தூக்கி எறிவார்கள். மத்தியில் மோடி மற்றும் அமித் ஷா தலைமை யிலான அரசு விரைவில் கவிழும்” என பேசினார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த பாஜக கொறடா சங்கர் கோஷ் கத்தி கூப்பாடு போட்டார். இதனால் திரிணாமுல் காங்கிரஸ் - பாஜக எம்எல்ஏக்களுக்கு கைகலப்பு ஏற்படும் சூழலில் சங்கர் கோஷ்  மற்றும் 4 பாஜக எம்எல்ஏக்கள் கூட்டத்தொடரில் இருந்து ஒரு நாள் இடைநீக்கம் செய்யப்படுவதாக சபாநாயகர் பீமன் பானர்ஜி அறிவித்தார். பாஜக எம்எல்ஏ சங்கர் கோஷ் சட்டமன்றத்தில் இருந்து வெளியேற மறுத்ததால், அவைக் காவலர்கள்  மூலம் வெளியேற்ற உத்தரவிடப் பட்டது. அவைக் காவலர்கள் வெளி யேற்றும் போது சங்கர் கோஷை தாக்கியதாகவும், அவர் பலத்த காயமடைந்ததாகவும் பாஜகவினர் குற்றச்சாட்டியுள்ளனர். இதனால் வெள்ளிக்கிழமை அன்று நடை பெறும் 4ஆவது நாள் கூட்டத்தில் திரி ணாமுல் காங்கிரஸ் - பாஜக மோதல் தீவிரமடையும் சூழல் ஏற்பட்டுள்ளது.