states

வேதாந்தாவை காப்பாற்ற திரைமறைவில் பேரம்?

புதுதில்லி, ஏப். 7 - தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் நிறு வனத்துக்கு எதிராக மக்களைத் திரட்டி போராட்டம் நடத்த நிதியுதவி வழங்கி யதாக தில்லியைச் சேர்ந்த ‘தி அதர் மீடியா’ என்ற தன்னார்வத் தொண்டு நிறுவனம் (NGO) மீது குற்றச்சாட்டு கள் எழுந்துள்ளதாகவும், இதுதொடர் பாக தீவிர விசாரணை மேற்கொண்டு வரு வதாகவும், ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. “தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்துக்கு நிதி வழங்கியது தொடர்பாக ‘தி அதர் மீடியா’ என்ற தன் னார்வத் தொண்டு நிறுவனம் மீது புகார்கள் வந்துள்ளனவா?” என்று காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நரன்பாய் ரத்வா மாநிலங்களவையில் கேள்வி எழுப்பியிருந்த நிலையில், அதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு, ஒன்றிய அரசின் உள்துறை இணையமைச்சர் நித்தியானந்த் ராய் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ளார்.  அதில், “தன்னார்வத் தொண்டு நிறு வனமான ‘தி அதர் மீடியா’, ஸ்டெர் லைட் நிறுவனத்துக்கு எதிரானப் போராட்டத்தை ஒருங்கிணைக்க வெளி நாட்டு நிதியை முறைகேடாகப் பயன் படுத்தியதாகப் புகார்கள் வந்துள்ளன.

அந்தப் புகார்கள் குறித்து தீவிர விசார ணை நடத்தப்பட்டு வருகிறது. 2019-2021 காலகட்டத்தில் அந்த நிறுவனத்துக்கு ரூ. 3 கோடியே 54 லட்சம் வெளிநாட்டு நிதி வந்துள்ளது. இதில், ரூ. 2 கோடியே 79 லட்சத்தை அந்நிறுவனம் பயன்படுத்தி யுள்ளது. இந்த நிதிப் பயன்பாடு குறித்து விரிவான விளக்கம் கேட்கப்பட்டுள் ளது. அந்த நிறுவனம் மீதான குற்றாச்சாட்டு கள் உறுதி செய்யப்பட்டால், அந்த நிறு வனத்துக்கு வழங்கப்பட்டிருந்த, வெளி நாட்டிலிருந்து நிதி பெறுவதற்கான உரிமம் ரத்து செய்யப்படும்” என்று நித்தியானந்த ராய் தெரிவித்துள்ளார். வேதாந்தா குழுமத்தின் முதலாளி யான அனில் அகர்வால், ஆரம்பம் முதலே ஸ்டெர்லைட் ஆலையைத் திறப்பதற்கு, ஒன்றிய பாஜக அரசின் மூலம் தீவிரமான முயற்சிகளை மேற் கொண்டு வருகிறார். இந்தப் பின்ன ணியிலேயே, ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டம் மக்கள் தன்னெழுச்சியாக நடத்திய போராட்டம்  அல்ல; அது இந்தியாவிற்கு எதிரான  வெளிநாட்டுச் சக்திகளால் தூண்டி விடப்பட்ட போராட்டம் என்று ஒன்றிய  பாஜக அரசின் உள்துறை இணை யமைச்சரே தற்போது கூறியிருக்கிறார். தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவியும் இதையே பொதுவெளியில் பேசி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார். பாஜக-வுக்கு மிக அதிகமான நன்கொடைகளை வழங்கும் கார்ப்பரேட் நிறுவனங்களில், அனில் அகர்வாலின் வேதாந்தா குழுமம்தான் நீண்டகாலமாக முதலிடத்தில் இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.