இளைஞர்களை இழிவுபடுத்திய பாஜக தேசியச் செயலாளர் கைலாஷ் விஜய்வர்கியா
புதுதில்லி, ஜூன் 20- ராணுவத்திற்கு ‘காண்ட்ராக்ட்’ அடிப்படையில் வீரர்களை நிய மிக்கும் ‘அக்னி பாதை’ என்ற திட் டத்தை, நடைமுறைப்படுத்தப் போவதாக நரேந்திர மோடி அரசு கடந்த வாரம் அறிவித்தது. இவ்வாறு நியமிக்கப்படும் வீரர்கள் 4 ஆண்டுகளுக்கு மட்டும் பணியில் இருப்பார்கள். அதன்பிறகு அவர்கள் வீட்டிற்கு அனுப்பப்படு வார்கள். பணியின் முடிவில் அவர் களுக்கு ரூ. 5 லட்சத்து 20 ஆயிரம் பணப்பலனாக வழங்கப்படும். ஓய்வூதியம் எதுவும் தரப்படாது என்று பாதுகாப்புத்துறை அமைச் சர் ராஜ்நாத் கூறினார். இதற்கு நாடு முழுவதும் தற் போது கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. 4 ஆண்டுகளுக்குப் பின் அந்த இளைஞர்களின் எதிர்காலத்திற்கு மோடி அரசு தரும் உத்தரவாதம் என்ன? என்று எதிர்க்கட்சித் தலை வர்கள் கேள்விகளை எழுப்பி வரு கின்றனர். “இந்நிலையில்தான், 4 ஆண்டு கள் பணிமுடிந்து வெளியே வரும் ‘அக்னி பாதை’ வீரர்களுக்கு, பாஜக அலுவலக பாதுகாவலர் பணிகளில் முன்னுரிமை தருவோம்” என்று கூறி பாஜக தலைவர்கள் அவ மானப்படுத்தியுள்ளனர்.
மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூ ரில் பத்திரிகையாளர் சந்திப்பு நடத் திய கைலாஷ் விஜய் வர்கியா, “ஒரு அக்னிவீரர் 4 ஆண்டுகள் சேவையை முடித்து தனது 25 வது வயதில் வெளியே வரும்போது அவர் கையில் ரூ.11 லட்சம் இருக்கும். அவரை அக்னிவீரர் என்று அனை வரும் கொண்டாடுவர். பாஜக அலு வலகப் பாதுகாப்புப் பணிக்கு ஆள் வேண்டும் என்றாலும் கூட நான் அக்னிவீரருக்கு முன்னுரிமை அளிப் பேன்” என்று பேசியுள்ளார். இதற்கு நாடு முழுவதும் எதிர்ப்பு எழுந்துள்ளது. “இந்திய ராணு வத்தில் பணியாற்றிய வீரர்களை தங்களின் கட்சி அலுவலக பாது காப்பிற்கு அழைப்பவர்கள் அந்தக் கருத்தை அவர்களோடு மட்டும் வைத்துக் கொள்ளலாம்” என்று பாஜக எம்.பி.யான வருண் காந் தியே, விஜய் வர்க்கியாவை சாடி யுள்ளார். “பாஜக தலைவர் வீரர்களை அவ மானப்படுத்துகிறார். அக்னிவீரர்கள் பாஜக அலுவலகத்திற்கு வெளியே காவலாளியாக பணியாற்றுவார் கள் என்று அந்த தலைவர் தெரிவித்தி ருப்பது வெட்கக்கேடானது” என காங்கிரஸ் தனது டுவிட்டர் பக்கத் தில் குறிப்பிட்டுள்ளது.
“நாட்டின் இளைஞர்கள் ராணுவத்தில் சேருவது தேசத்திற்கு சேவை செய்ய மட்டும்தான். அவ் வாறிருக்க அவர்களையும், நாட்டின் இளைஞர்களையும் அவமதிக்க வேண்டாம்” என்று தில்லி முதல்வ ரும் ஆம் ஆத்மி கட்சியின் தலைவரு மான அரவிந்த் கெஜ்ரிவால் கண் டித்துள்ளார். இதனிடையே, “அக்னிபாதை திட்டத்திலிருந்து வெளியே வரும் அக்னிவீரர்களுக்கு தகுந்த பயிற்சி அளித்து அவர்கள் விரும்பும் துறை யில் அவர்களின் திறமை பயன் படுத்தப்படும் என்பதைத்தான் நான் சொல்ல வந்தேன்” என்று பாஜக செயலாளர் கைலாஷ் விஜய் வர்க்கியா பின்வாங்கியுள்ளார். “டூல்கிட் கும்பல்” தனது கருத்துக் களை திரிப்பதாகவும் அவர் எதிர்க்கட்சிகள் மீது பழியைத் தூக்கிப் போட்டுள்ளார். அக்னி பாதை வீரர்களை, பாஜக தேசியச் செயலாளர் கைலாஷ் விஜய் வர்க்கியா அவமானப்படுத்தி யது ஒருபுறமிருக்க, ஒன்றிய பாஜக அமைச்சர் கிஷண் ரெட்டி அவர் களை இன்னும் ஒருபடி மேலே சென்று மோசமாக இழிவுபடுத்தி யுள்ளார். தில்லியில் செய்தியாளர் களுக்குப் பேட்டியளித்திருக்கும் அவர், “அக்னி பாதை திட்டம், திற மையான பணியாளர்களை உரு வாக்க ஒரு பயிற்சிக் களமாக இருக் கும். அக்னி பாதை திட்டத்தின்கீழ் தேர்வு செய்யப்படும் வீரர்களுக்கு முடிதிருத்தம், சலவை, கார் ஓட்டு நர், எலெக்ட்ரீசியன் உள்ளிட்ட பயிற் சிகள் வழங்கப்படும். இந்த பயிற்சி கள் அவர்கள் பல்வேறு துறைகளில் பணிபுரிவதற்கு உதவியாக இருக் கும்” என்று கூறியுள்ளார். இது புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள் ளது.
ரிசர்வ் வங்கி இயக்குநர் பதவிபெற்ற ஆனந்த் மகேந்திரா சொல்கிறார் 4 ஆண்டுக்குப் பின் ‘அக்னி பாதை’ வீரர்களுக்கு வேலைதரத் தயாராம்!
புதுதில்லி, ஜூன் 20 - ‘அக்னி பாதை’ வீரர்களுக்கு நான் காண்டுகளுக்கு மட்டும் பணி வழங்கப் படும் என்றால், அதற்குப் பிறகு அவர் களின் எதிர்காலத்திற்கு யார் பொறுப் பேற்பது? என்று கேள்விகள் எழுந்த நிலையில், அக்னி வீரர்களுக்கு ஆயுதப் படைகளில் 10 சதவிகிதம் வேலை வழங் கப்படும் என்று உள்துறை அமைச்சர் அமித்ஷாவும், பாஜக ஆளும் அசாம், உத்தரகண்ட் மாநிலங்களில் காவல் துறையில் பணி வழங்கப்படும் அந்தந்த மாநில முதல்வர்களும் சமாளிப்பு முயற்சியில் இறங்கியிருக்கின்றனர். இந்நிலையில், “அக்னி பாதை வீரர்கள் கவலையடைய வேண்டிய தில்லை அவர்களுக்கு கார்ப்பரேட் துறைகளில் சிறப்பான வேலைகள் காத்திருக்கின்றன” என்று பிரபல தொழி லதிபர் ஆனந்த் மகேந்திரா தன்பங்கிற்கு ஆறுதல் கூற முயன்றுள்ளார். தமது மகேந்திரா குழுமம் அவர்களுக்கு வேலை வழங்கும் என்று கூறியுள் ளார். இதுதொடர்பாக டுவிட்டரில் கருத் துப் பதிவிட்டிருக்கும் அவர், “அக்னி பாதை திட்டத்தைச் சுற்றி நடந்த வன் முறையால் வருத்தம் அடைந்தேன். கடந்த ஆண்டு இத்திட்டம் முன்மொழி யப்பட்டபோதும் சரி, இப்போதும் சரி நான் சொல்வது ஒன்றுதான்!
அக்னி வீரர்களின் ஒழுக்கம் மற்றும் திறன்கள் அவர்களைச் சிறந்த வேலைவாய்ப் பிற்கு ஏற்றவர்களாக மாற்றும். அத்த கைய பயிற்சி பெற்ற, திறமையான இளைஞர்களை பணியமர்த்தும் வாய்ப்பை மகேந்திரா குழுமம் வரவேற்கிறது” என்று தெரிவித்துள்ளார். மேலும், “அக்னி வீரர்களுக்கு மகேந் திரா நிறுவனத்தில் என்ன மாதிரியான வேலை கிடைக்கும்?” என்ற கேள்விக்கு, “கார்ப்பரேட் துறையில் அக்னிவீரர் களுக்கு மிகப் பெரிய வேலைவாய்ப்பு கள் உள்ளன. தலைமைத்துவம், குழு வாக இணைந்து பணிபுரிவது மற்றும் உடல் பயிற்சி ஆகியவற்றை அக்னி வீரர் கள் கொண்டுள்ளனர். இது தொழில் துறைக்குத் தேவையான தொழில்முறை தீர்வுகளை வழங்குகிறது” என்று ஆனந்த் மகேந்திரா பதிவிட்டுள்ளார். அண்மையில், ரிசர்வ் வங்கி மத்திய வாரியத்தின் (Central Board of Reserve Bank of India) பகுதிநேர அதிகாரப்பூர்வ மற்ற இயக்குநர் பதவிகளில் 3 முதலாளி களை மோடி அரசு நியமித்தது. அவர் களில் மகேந்திர குழுமத்தின் தலைவர் ஆனந்த் மகேந்திராவும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனந்த் மகேந்திராவுடன், டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் தலைவர் வேணு சீனிவாசன், ‘ஜைடஸ் லைப் சயின்சஸ் லிமிடெட்’ நிறுவனத்தின் தலைவர் - குஜராத்தைச் சேர்ந்த பங்கஜ் ராமன்பாய் படேல் ஆகிய முதலாளி களையும் மோடி அரசு ரிசர்வ் வங்கி வாரி யத்தின் இயக்குநர்களாக நியமித்தி ருக்கிறது.