states

img

பசு வியாபாரிகளின் சொத்துக்களை போலீஸ் பறிமுதல் செய்யலாம்!

கவுகாத்தி, டிச.25- சட்டவிரோதமாக கால்நடை வியா பாரத்தில் ஈடுபடுவோரின் சொத்துக் களை பறிமுதல் செய்ய, காவல்துறைக்கு அதிகாரம் வழங்கி, அசாம் மாநில பாஜக அரசு சட்டத்தைத் திருத்தியுள்ளது. அசாமில் ஹிமந்தா பிஸ்வா சர்மா தலைமையில் பாஜக ஆட்சி நடந்து வரு கிறது. இங்கு கடந்த ஆகஸ்ட் 13 அன்று பசுப் பாதுகாப்பு மசோதா ஒன்று அறி முகப்படுத்தப்பட்டது. அந்த மசோதா வில், கோயில் அருகிலோ, கோயிலை ஒட்டிய ஐந்து கிலோ மீட்டர் சுற்றளவிலோ மாட்டிறைச்சி விற்பனைக்கு தடை விதிக் கப்பட்டு இருந்தது. இதற்கே அப்போது கடும் எதிர்ப்பு எழுந்தது. எனினும் ஹிமந்தா பிஸ்வா சர்மா அரசு அத னைக் கண்டுகொள்ளவில்லை. இந்நிலையில், கடந்த வியாழக்கிழ மையன்று பசு பாதுகாப்பு மசோதா வில் புதிய திருத்தம் ஒன்றை அது கொண்டு வந்துள்ளது. அதில், முன்பு மாட்டி றைச்சிக்கு விதிக்கப்பட்ட தடையோடு சேர்த்து, கடந்த 6 ஆண்டுகளில் சட்ட விரோத கால்நடை வியாபாரத்தில் ஈடு பட்டு சேர்த்த சொத்துக்களை, சம்பந்தப் பட்ட நபர்களிடமிருந்து சோதனை நடத்தி பறிமுதல் செய்யும் அதிகாரத்தை காவல் துறையினருக்கு வழங்கியுள்ளது. மேலும், அசாம் வழியாக பிற மாநி லங்களில் இருந்து வெளி மாநிலங்க ளுக்கு கால்நடைகளை கொண்டு செல் வதற்கு தடை விதித்து இருப்பதுடன், சட்டத்தை மீறினால் 3 முதல் 8 ஆண்டு கள்வரை சிறைத்தண்டனை மற்றும் 3 லட்சம் ரூபாயிலிருந்து 5 லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என்றும் சட்டத் திருத்தத்தில் குறிப்பிட்டுள்ளது.