states

img

பீகார் தேர்தல் விளம்பரங்கள்  வெளியிட கட்டுப்பாடு

பீகார் தேர்தல் விளம்பரங்கள்  வெளியிட கட்டுப்பாடு

இரண்டு கட்டங்களாக (நவ. 6,11) நடைபெறும் பீகார் சட்டமன்றத் தேர்தலின் முதற்கட்ட வாக்குப் பதிவு நவம்பர் 6ஆம் தேதி நடைபெறு கிறது. இந்த தேர்த லுக்கான வேட்பு மனுத்தாக்கல் நிறைவு பெற்ற நிலை யில், விறுவிறுப்பாக பிரச்சாரங்கள் நடை பெற்று வருகின்றன. இந்நிலையில், பீகாரில் விளம்ப ரங்களை வெளியிட தேர்தல் ஆணை யம் கட்டுப்பாடு விதித்துள்ளது. இதுதொ டர்பாக தேர்தல் ஆணையம் வெளி யிட்டுள்ள அறிவிப்பில்,”பீகார் மாநில அல்லது மாவட்ட அளவில் ஊடக சான்றிதழ் மற்றும் கண்காணிப்புக் குழு வால் (MCMC) முன் சான்றளிக்கப்பட்ட உள்ளடக்கம் இல்லாவிட்டால், அரசியல் கட்சியோ, வேட்பாளரோ, அமைப்போ அல்லது தனிநபரோ வாக்குப்பதிவு நாளி லோ அல்லது அதற்கு முந்தைய நாளி லோ அச்சு ஊடகங்களில் எந்தவொரு விளம்பரத்தையும் வெளியிடக்கூடாது. அரசியல் விளம்பரங்களுக்கு முன் சான்றிதழ் கோரும் விண்ணப்பதாரர்கள், விளம்பரம் வெளியிடப்படும் தேதிக்கு குறைந்தது இரண்டு நாட்களுக்கு முன்ன தாக கண்காணிப்புக் குழுவிடம் தங்கள் கோரிக்கைகளை சமர்ப்பிக்க வேண்டும். நியாயமான தேர்தலை உறுதி செய்ய இது முடிவு எடுக்கப்பட்டுள்ளது” என அதில் கூறப்பட்டுள்ளது.