states

img

பீகார் : சட்டமன்றத் தேர்தல் பணியை தொடங்கியது சிபிஎம் பிப்ரா, விபூதிப்பூர் தொகுதிகளில் ஆலோசனைக் கூட்டம்

பீகார் : சட்டமன்றத் தேர்தல் பணியை தொடங்கியது சிபிஎம்  பிப்ரா, விபூதிப்பூர் தொகுதிகளில் ஆலோசனைக் கூட்டம்

பீகார் மாநிலத்தில் இந்த ஆண்டு நவம்பர் மாதம் சட்ட மன்ற தேர்தல் நடைபெறுகி றது. இந்த தேர்தலுக்கான பணி யை ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் உள்ளிட்ட இடதுசாரி கட்சி கள் (சிபிஐ, சிபிஐ (எம்-எல்), விகாசீல் இன்ஸான் உள்ளிட்ட கட்சி கள் அடங்கிய “இந்தியா” கூட்டணி தீவிரமாக முன்னெடுத்து வரு கின்றது. இந்நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பிப்ரா, விபூ திப்பூர் உள்ளிட்ட சட்டமன்ற தொகு திகளில் ஆலோசனைக் கூட்டங்கள் மூலம் பீகார் சட்டமன்ற தேர்த லுக்கான தொகுதி வாரியான தேர்தல் பணியை தொடங்கி யுள்ளது. விபூதிப்பூர் சிபிஎம் சிட்டிங் தொகுதியாகும். 2020ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் 73,822 வாக்குகள் பெற்று 40,496 வாக்குகள் என பெரும் வித்தியா சத்தில் சிபிஎம் வேட்பாளர் அஜய் குமார் வெற்றி பெற்றார். அதே போல பிப்ரா தொகுதியில் 80,410 வாக்குகள் பெற்ற சிபிஎம் வேட்பாளர் ராஜ்மங்கள பிரசாத், வெறும் 8,177 வாக்குகள் என சிறிய வித்தியாசத்தில் தோல்விய டைந்தார். ஆலோசனை பிப்ராவில் (கிழக்கு சம்பாரன்) ஆகஸ்ட் 12ஆம் தேதியும், விபூ திப்பூரில் (சமஸ்திப்பூர்) ஆகஸ்ட்  13ஆம் தேதியும் சிபிஎம் சார்பில் ஆலோசனைக் கூட்டங்கள் நடை பெற்றன. இந்த இரு கூட்டங்களி லும் 600-க்கும் மேற்பட்ட சிபிஎம் ஊழியர்கள் பங்கேற்றனர். 2 கூட்டங்களிலும் அரசியல் தலை மைக்குழு உறுப்பினர் டாக்டர் அசோக் தாவ்லே, மத்தியக் குழு உறுப்பினர்கள் லாலன் சவுத்ரி (மாநிலச் செயலாளர்), அவதேஷ் குமார் ஆகியோர் உரையாற்றினர். பிப்ராவில் நடைபெற்ற ஆலோ சனைக் கூட்டத்திற்கு மூத்த தலை வரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான ராமஷ்ரே சிங் தலைமை தாங்கினார். மாநிலக் குழு உறுப்பினர் ராஜ் மங்கள பிர சாத் மற்றும் மாவட்டச் செயலாளர் சத்யேந்திர மிஸ்ரா ஆகியோர் உரையாற்றினர்.  விபூதிப்பூர் கூட்டத்திற்கு மூத்த தலைவர் விஷ்வநாத் மகதோ தலைமை தாங்கினார். மாநில செயற்குழு உறுப்பினர் அஜய் குமார் (சட்டமன்ற உறுப்பினர்), மாவட்டச் செயலாளர் ராமஷ்ரே மகதோ மற்றும் மாநிலக் குழு உறுப்பினர்கள் மனோஜ் சுனில், மனோஜ் குப்தா, ஷா ஜாபர் இமாம், ராம் தயாள் பாரதி ஆகி யோர் உரையாற்றினர். இந்த 2  கூட்டங்களிலும் நாடு மற்றும் மாநி லத்தின் முன்னால் உள்ள கடுமை யான அரசியல் சவால்களை அனை த்து பேச்சாளர்களும் எடுத்து ரைத்தனர். தேர்தல் தயாரிப்பு குறித்த நடவடிக்கைகள் தொடர்பா கவும் அறிவுரையும் வழங்கப் பட்டது. சீத்தாராம் யெச்சூரி,  விஜய் காந்த் தாகூர், பிடல் காஸ்ட்ரோ  ஆகஸ்ட் 12ஆம் தேதி சீத்தா ராம் யெச்சூரியின் பிறந்தநாளும், முன்னாள் பீகார் மாநிலச் செயலா ளரும், மத்தியக் குழு உறுப்பினரு மான விஜய் காந்த் தாகூரின் நினைவு நாள் ஆகும். ஆகஸ்ட் 13ஆம் தேதி பிடல் காஸ்ட்ரோ பிறந்த நாளின் நூற்றாண்டு விழா தொடக்கமாகும். இரு கூட்டங்களி லும் சீத்தாராம் யெச்சூரி, விஜய் காந்த் தாகூர், பிடல் காஸ்ட்ரோ ஆகியோரின் படங்களுக்கு மலர் மாலைகள் சூட்டப்பட்டு, அவர்க ளின் பங்களிப்புகளின் முக்கியத்து வம் விரிவாக விளக்கப்பட்டது. அதே போல இரண்டு கூட்டங்களி லும் கியூபா ஒற்றுமை நிதியாக ரூ.10,500 ஒப்படைக்கப்பட்டது. இன்று மஞ்ஜி ‘தொகுதி’ சிபிஎம் பீகார் மாநிலக் குழு தீர்மானித்த 4 முன்னுரிமைத் தொகுதிகளில் பிப்ரா, விபூதிப்பூர் ஆகிய 2 தொகுதிகளில் ஆலோ சனை கூட்டம் நடைபெற்றுள்ளது. தொடர்ந்து சரண் மாவட்டத்தின் உள்ள மஞ்ஜி சட்டமன்ற தொகுதி யில் ஆகஸ்ட் 19ஆம் தேதி சிபிஎம் ஊழியர்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. முன்ன தாக பெகுசராய் மாவட்டத்தின் மதிகானி சட்டமன்ற தொகுதியில், அந்த தொகுதிக்கான  மற்றும் பொதுவான மாநில அளவிலான சிபிஎம் ஊழியர்களின் ஆலோச னைக் கூட்டம் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

பிப்ராவில் சிபிஎம் வேட்பாளர் மீது பாஜக குண்டர்கள் தாக்குதல்

பிப்ரா சட்டமன்ற தொகுதியில் சிபிஎம் ஆலோச னைக் கூட்டம்  நடைபெற்ற இரண்டு நாட்களு க்குப் பிறகு, ஆகஸ்ட் 14ஆம் தேதி “இந்தியா” கூட்டணி வேட்பாளர் ராஜ் மங்கள பிரசாத் (சிபிஎம்) மீது பாஜக குண்டர்கள்  குண்டு வீசியும், கத்தி உள்ளிட்ட ஆயுதங்கள் மூலமும் தாக்குதல் நடத்தி கொலை முயற்சி யில் ஈடுபட்டனர். இந்த  கொலைவெறித் தாக்கு தல் முயற்சியில் ராஜ் மங்கள பிரசாத் நல் வாய்ப்பாக உயிர் தப்பினார். எனினும் ராஜ் மங்கள பிரசாத்தை காப்பாற்ற முயன்ற அவரது ஓட்டுநர் பலத்த காயமடைந்தார். பொதுமக்கள் சம்பவ இடத்திற்கு விரைந்ததும் குண்டர்கள் தப்பி ஓடினர். எனினும் தாக்குதலில் ஈடுபட்ட ஒருவரை பொதுமக்கள் பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்தனர். காவல் துறை அவரை கைது செய்து, அவர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளதாகவும், மற்றவர்களை தேடும் பணி நடைபெற்று வருவதாகவும் செய்திகள் வெளியாகி யுள்ளன. தொடர் தாக்குதல் இதற்கு முன் ராஜ் மங்கள பிரசாத் மீது ஐபிசி பிரிவு 302 (கொலை) என்ற பிரிவில் பொய்யான வழக்குப் பதிவு செய்து, அவரை கைது செய்ய பீகார் பாஜக கூட்டணி அரசு சதி மேற்கொண்டது. இந்த சதியை சிபிஎம்-இன் ஒருங்கிணைந்த வெகுஜனப் போராட் டம் மற்றும் தீவிர சட்டத் தலையீடு மூலமாக ராஜ்  மங்களை சிறையிலடைக்கும் முயற்சி தடுக்கப் பட்டது. தொடர்ந்து தற்போது ராஜ் மங்களை கொலை செய்யும் முயற்சியும் அரங்கேற்றப்பட்டுள்ளது. ராஜ் மங்களை சிறையில் அடைக்கும் முயற்சி மற்றும் கொலைவெறித் தாக்குதல் உள்ளிட்ட 2 சம்பவங்களிலும் மாநில அளவிலான பொறுப்பில் உள்ள மிகப்பெரும் பாஜக தலைவர்கள் ஈடுபட்டி ருப்பதாக பரவலாக சந்தேகிக்கப்படுகிறது..