மத்தியத் தொழிற்சங்கங்களின் கூட்டுமேடை ஆதரவு
புதுதில்லி, ஜூலை 18- பொதுத்துறை வங்கிகளைத் தனி யார்மயமாக்கிட ஒன்றிய அரசாங்கம் மேற்கொண்டுவரும் நடவடிக்கை களைக் கண்டித்து, ஜூலை 21 அன்று அனைத்து வங்கி ஊழியர்கள் நாடாளு மன்றத்திற்கு முன் நடத்தும் தர்ணா போராட் டத்திற்கு, மத்தியத் தொழிற்சங்கங்களின் கூட்டுமேடை ஆதரவு அளித்துள்ளது. இது தொடர்பாக மத்தியத் தொழிற் சங்கங்கள் மற்றும் துறைவாரி சம்மேள னங்கள்/சங்கங்களின் கூட்டுமேடை ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டிருப்பதாவது: ஒன்றிய அரசாங்கம், பொருளா தாரத் தாராளமயம் மற்றும் தனியார்மயக் கொள்கையின் ஒரு பகுதியாக பொதுத் துறை வங்கிகளைத் தனியார்மயமாக் கிட தொடர்ந்து நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அரசாங்கத்தால் அமைக்கப் பட்ட பல்வேறு குழுக்கள் அரசாங்கத்தின் இதே கருத்தை எவ்விதப் பிசிறுமின்றி எதிரொலித்து, வங்கிகளைத் தனியார் மயமாக்கிட வேண்டும் என்று பரிந்து ரைத்திருக்கின்றன. சமீபத்தில் பூனம் குப்தா தலைமையிலான தேசிய பொரு ளாதார ஆராய்ச்சி கவுன்சிலும், நிதி ஆயோக் துணைத் தலைவர் அரவிந்த் பனகாரியாவும் அனைத்துப் பொதுத் துறை வங்கிகளையும் தனியார்மய மாக்கிட வேண்டும் என்று பரிந்துரைத்தி ருக்கிறார்கள்.
மக்களின் சேமிப்பைப் பாதுகாக்க முன்னுரிமை..
ஆனால், இந்தியா போன்ற வளர்முக நாட்டில் பெருமளவில் பொதுமக்களின் சேமிப்புகளைக் கொண்டு இயங்கிடும் வங்கிகள் பொதுத்துறையிலேயே இருந் திட வேண்டியது அவசியமாகும். ஏனெ னில் கடந்த காலங்களில் தனியார் வங்கி கள் பல நிலைகுலைந்து போயிருப்பதை யும் மக்கள் தங்களின் மதிப்புமிக்க டெபா சிட்டுகளை இழந்துள்ளார்கள் என்கிற கசப்பான அனுபவத்தையும் பெற்றிருக் கிறோம். இன்றைய தினம் வங்கிகளில் உள்ள மக்களின் மொத்த சேமிப்புத் தொகை 165 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமாகும். எனவே, மக்களின் பணத்தைப் பாதுகாத்திட தலையாய முன்னுரிமை அளித்திட வேண்டும் என் பதே முக்கியம் என்பதை நாம் என்றென் றும் மனதில் கொள்ள வேண்டும். மேலும், நம் பொருளாதாரத்தின் வளர்ச்சிக்காக, இந்த டெபாசிட்டுகளை பொருளாதாரத்தின் முக்கியமான மற்றும் தேவையான துறைகளுக்குப் பயன் படுத்திட வேண்டும். வேளாண்மை, வேலை வாய்ப்புப் பெருக்கம், வறுமை ஒழிப்பு, சுகாதாரம் மற்றும் கல்வி, மகளிர் மேம் பாடு, சிறிய மற்றும் நடுத்தரத் தொழில் கள், கைவினைஞர்கள், ஏற்றுமதியா ளர்கள் போன்றவர்களுக்குப் பொதுத் துறை வங்கிகள்தான் முன்னுரிமை கொடுத்து கடன்கள் வழங்கிடும். தனியார் வங்கிகள் எங்கே லாபம் அதிகம் ஈட்டமுடி யுமோ அதற்கு மட்டுமே கடன்கள் அளிக்க ஆர்வம் காட்டிடும். அவை நாட்டின் சமூ கத்தின் தேவைகளைப்பற்றிக் கவலைப் படாது.
கடன்களை திருப்பிச் செலுத்தாத கார்ப்பரேட்டுகள்
மேலும், கடந்த ஐம்பது ஆண்டுகளாக நாம் பொதுத்துறை வங்கிகள் சாமானிய மக்களிடம் சென்றடையவேண்டும் என்பதற்காக கிராமப்புறங்களிலும் எண் ணற்ற கிளைகளைத் திறந்திருப்பதைப் பார்க்கிறோம். தனியார் வங்கிகள் இவ் வாறு கிளைகளைத் திறக்காது. அவை லாபகரமாக இருக்காது என்று அவை கூறிவிடும். இப்போது பொதுத்துறை வங்கி களில் கடன் வாங்கியுள்ளவர்களில் பெரும் தனியார் கார்ப்பரேட் கம்பெனி கள்தான் கடன்களைத் திருப்பிக்கொடுக் காமல் இருந்து வருகின்றன. இந்த நிலை யில் வங்கிகளை தனியார்துறையிடம் ஒப்படைப்பது என்பதில் எவ்விதமான அர்த்தமும் இல்லை. எனவேதான் நம் பொருளாதார வளர்ச்சிக்குப் பிரதானமான என்ஜின் களாக விளங்கும் பொதுத்துறை வங்கிகளைத் தனியார்மயப்படுத்து வதை நாங்கள் முழுமையாக எதிர்க்கி றோம். அரசாங்கம், பொதுத்துறை வங்கி களைத் தனியார்மயப்படுத்திடும் நட வடிக்கைகளை வங்கி ஊழியர் சங்கங்க ளின் கூட்டமைப்பு (UFBU-United Forum of Bank Unions) என்னும் பதாகையின் கீழ் தொடர்ந்து எண்ணற்றப் போராட்டங் களை நடத்தி வந்திருக்கிறது என்பது குறிப்பிடப்பட வேண்டும். அவர்கள் போராட்டங்கள் அரசாங்கம் நாட்டில் மிகக் கேந்திரமாக விளங்கிவரும் ரயில்வே, நிலக்கரி, ராணுவம் மற்றும் பல பொதுத்துறை வங்கிகளையும் தனி யார்மயமாக்கிட மேற்கொண்டுவரும் முயற்சிகளையும் அம்பலப்படுத்தி வருகின்றன. நாங்கள் வங்கி ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்புக்கு முழு ஆத ரவினைத் தெரிவித்துக் கொள்கிறோம். வங்கி ஊழியர்கள் 2022 ஜூலை 21 அன்று நாடாளுமன்றம் முன் நடத்திட வுள்ள தர்ணா போராட்டம் அனைத்து விதங்களிலும் வெற்றி பெற வாழ்த்து கிறோம்.