states

img

வைப்புத்தொகைக்கு பதிலாக நிலம் வழங்குவதாக 5 கோடி பேரிடம் ரூ.49,000 கோடி மோசடி முக்கிய குற்றவாளியான பிஏசிஎல் நிறுவன இயக்குநர் கைது

வைப்புத்தொகைக்கு பதிலாக நிலம் வழங்குவதாக 5 கோடி பேரிடம் ரூ.49,000 கோடி மோசடி

முக்கிய குற்றவாளியான பிஏசிஎல் நிறுவன இயக்குநர் கைது

ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரை தலைமையிடமாகக் கொண்டு நிர்மல்சிங் பாங்கு என்பவரால் கடந்த 1983ஆம்  ஆண்டில் பேர்ல்ஸ் கிரீன் பாரஸ்ட் என்ற பெய ரில் தொடங்கப்பட்ட நிறுவனம், பின்னர் 1996ஆம்  ஆண்டு அதன் பெயரை பேர்ல் அக்ரோடெக் கார்ப்பரேசன் லிமிடெட் (பி.ஏ.சி.எல்) என்று மாற்றியது.  நாடு முழுவதும் நிலத்தை வாங்கி விற்பனை செய்யும் தொழிலை செய்து வருவதாகவும், முதலீடு செய்பவர்களுக்கு ஆண்டுக்கு 12.50% வட்டி வழங்கப்படும் என்றும் விளம்பரம் செய்தது. அதை நம்பி, நாடு முழுவதும் 5.85 கோடி மக்கள், ரூ.49,100 கோடி முதலீடு செய்தனர். பின்னர் முதலீட்டாளர்களின் எண்ணிக்கை 6 கோடியாகவும், முதலீட்டின் அளவு ரூ.60,000 கோடியாகவும் அதிகரித்தது. ஆனால் முதலீட்டுத் தொகையை பிஏசிஎல் ஏப்பம் விட்டது.  பிஏசிஎல் நிறுவனத்தின் செயல்பாடுகள் சட்ட விரோதமாக இருப்பதாகக் கூறி தொடரப்பட்ட வழக்குகளை விசாரித்த உச்சநீதிமன்றம், பிஏசிஎல் நிறுவனம் செயல்பட தடையும் விதித்தது. சிபிஐ, செபி அமைப்புக்கு ஆணை யிட்ட உச்சநீதிமன்றம், நிறு வனத்தின் சொத்து களை விற்று முதலீட்டா ளர்களுக்கு அவர்களின் பணத்தைத் திருப்பித் தர உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ஆர்.எம்.லோதா தலைமையில் குழு அமைத்தது. அதன்பின் 8 ஆண்டுகளாகிவிட்ட நிலையில், ரூ.10,000க்கும் குறைவாக முதலீடு செய்த 12 லட்சம் பேருக்கு மட்டும் தான் ரூ.429.13 கோடி  திருப்பித் தரப்பட்டுள்ளது. இது மோசடி செய்யப்பட்ட பணத்தில் 1%க்கும் குறை வான தொகையாகும். மீதமுள்ள முதலீட்டா ளர்களுக்கு அவர்களின் பணத்தை மீட்டுத் தருவதில் எந்தவிதமான முன்னேற்றமும் ஏற்படவில்லை. மாறாக பின்னடைவு ஏற்பட்டிருக்கிறது. பிஏசிஎல் நிறுவனம் தமிழ்நாடு உள்ளிட்ட இந்திய மாநிலங்களில் மொத்தம் 1.83 லட்சம் ஏக்கர் நிலங்களை வாங்கிக் குவித்திருக்கிறது. இவை தவிர ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல நாடுகளில் இந்த நிறுவனத்திற்கு சொத்துகள் உள்ளன. அவற்றை விற்பனை செய்தால்,  அந்தப் பணத்தைக் கொண்டு, முதலீட்டாளர் களின் பணத்தை முழுமையாக திருப்பித் தர முடியும். அதற்கான முயற்சியில் லோதா குழு ஈடுபட்டிருந்தாலும் கூட, பல இடங்களில் பிஏசி எல் நிறுவனத்தில் சொத்துகள் சட்டவிரோதமாக விற்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், பிஏசிஎல் நிறுவன இயக்குந ரான குர்நாம் சிங் என்பவரை உத்தரப்பிரதேச பொருளாதார குற்றப் பிரிவு வியாழனன்று இரவு கைது செய்தது. பஞ்சாபின் ரோபார் மாவட்டத் தில் 69 வயதான குர்நாம் சிங் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த மோசடி வழக்கில் குர்நாம் சிங் உட்பட 10 பேர் குற்றவாளிகள் ஆவர். இதில் 4 பேர் ஏற்கனவே சிபிஐ வழக்குகளில் சிறையில் உள்ளனர். மீதமுள்ள குற்றவாளிகளை தேடும் பணி நடந்து வருகிறது என செய்திகள் வெளியாகியுள்ளன.