states

img

அயோத்தி, மதுரா இல்லை; கோரக்பூரில் ஆதித்யநாத்!

உத்தரப் பிரதேசத் தில் முதல் 2 கட்டத் தேர்தலுக்கான 107 வேட்பாளர்களின் பெயர்ப் பட்டியலை சனிக்கிழமையன்று பாஜக தலைமை வெளி யிட்டுள்ளது. இதில், முதல்வர் ஆதித்யநாத்திற்கு சொந்த ஊரான கோரக்பூர் தொகுதியே ஒதுக் கப்பட்டுள்ளது. அவர் அயோத்தியிலோ, மதுராவிலோ போட்டியிடுவார் என்று முன்பு கூறப்பட்டு வந்த நிலையில், இந்த தொகுதிகள் ஒதுக்கப்படவில்லை. துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுரியா வுக்கு சிராத்து தொகுதி ஒதுக்கப்பட்டுள் ளது.