பாஜக ஆளும் ஒடிசாவில் மீண்டும் கொடூரம்
கல்லூரி மாணவி கும்பல் பாலியல் பலாத்காரம்
புவனேஸ்வரம் ஒடிசா மாநிலத்தில் பாஜக ஆட்சி அமைந்த பின்பு பெண்கள், சிறுமி களுக்கு எதிரான பாலியல் வன்முறைச் சம்பவங்கள் மிக மோசமான அளவில் அதிகரித்து வருகின்றன. கடந்த 4 மாதங்க ளில் மாநிலம் முழுவதும் 50க்கும் மேற்பட்ட பாலியல் வன்முறைச் சம்பவங்கள் நிகழ்ந் துள்ளன. சிறுமி, கல்லூரி மாணவிகள், இளம்பெண்கள் என 10க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், ஒடிசாவின் பூரி மாவட் டத்தைச் சேர்ந்த 19 வயது கல்லூரி மாணவி 4 பேர் கொண்ட கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். செப்., 13 அன்று இந்த கொடூரம் நிகழ்ந்துள்ளது. பாதிக்கப்பட்ட மாணவி சனிக்கிழமை மதியம் (செப்., 13) தனது காதலனுடன் பாலிகர்சந்தி கடற்கரை யில் பேசிக்கொண்டு இருந்தார். அப்போது 4 பேர் கொண்ட கும்பல் காதல் ஜோடியை செல்போனில் வீடியோ, புகைப்படம் எடுத்து, இதனை உங்கள் பெற்றோ ரிடம் அளிக்காமல் நீக்க வேண்டும் என்றால் பணம் தர வேண்டும் என மிரட்டியுள்ளது. இதற்கு காதல் ஜோடி மறுப்பு தெரிவிக்க, காதலனை சரமாரியாக தாக்கி மயக்கமடையச் செய்துள்ளது. தொடர்ந்து அருகே உள்ள வனப்பகுதியில் மாணவியை கும்பல் பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு தப்பிச்சென்றது. இந்த கொடூரச் சம்பவம் தொடர்பாக பாதிக் கப்பட்ட மாணவி திங்களன்று மாலை காவல்துறையில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல்துறை 3 பேரை கைது செய்துள்ளதா கவும், தலைமறைவாக உள்ள ஒருநபரை தீவிரமாக தேடி வருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.