நாகாலாந்தின் ஆளுநராக அஜய் குமார் பல்லா பதவியேற்பு
வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான நாகாலாந்து மாநில ஆளுநராக தமிழ்நாட்டைச் சேர்ந்த பாஜக மூத்த தலைவர் இல. கணேசன் பணியாற்றி கொண்டு இருந்தார். இவரது திடீர் மறைவைத் தொ டர்ந்து, மணிப்பூர் ஆளுநராக இருக்கும் அஜய் குமார் பல்லா கூடுதல் பொறுப் பாக நாகாலாந்து மாநிலத்தில் பணி யாற்றும் அறிவிப்பை ஒன்றிய அரசு இரண்டு தினங்களுக்கு முன் வெளி யிட்டது. இந்நிலையில், திங்களன்று நாகா லாந்து மாநிலத்தின் 22ஆவது ஆளுநராக அஜய் குமார் பல்லா பொறுப்பேற்றார். அவருக்கு அசாம் மாநிலத்தின் கவு காத்தி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அசுதோஷ் குமார் பதவிப் பிரமாணம் செய்துவைத்தார். பதவியேற்பு விழாவில் நாகாலாந்து முதலமைச்சர் நெய்பியு ரியோ, துணை முதலமைச்சர்கள் டி.ஆர். ஜெலியாங், ஓய் பாட்டன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
                                    