states

வாகனம், வீடு, தனி நபர் கடன்களுக்கு கூடுதல் வட்டி

புதுதில்லி, செப். 3 - ரிசர்வ் வங்கியிடமிருந்து நாட்டின் பிற வணிக வங்கிகள் பெறும் கடன் களுக்கான அடிப்படை வட்டி விகிதம் ரெப்போ எனப்படுகிறது. அந்த வகை யில், கடந்த ஆகஸ்ட் மாதத்தில், ரிசர்வ் வங்கி தனது ரெப்போ வட்டி விகிதத்தை 5.40 சதவிகிதமாக உயர்த்தியது. அப்போதே பல்வேறு வங்கிகள், ரெப்போவுடன் தொடர்புடைய (Repo Linked Lending Rate -RLLR) கடன்களுக்கான வட்டியை உயர்த்த ஆரம் பித்தன. இந்த வரிசையில், பஞ்சாப் நேஷனல் வங்கி (Punjab National Bank - PNB), இந்தியன் வங்கி (Indian Bank) ஆகியவையும் தாங்கள் வழங்கும் கடன்களுக்கான வட்டி விகிதங்களை உயர்த்தியுள்ளன. இதுகுறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள பஞ்சாப் நேஷ னல் வங்கி: “ரெப்போ விகிதத்தை ரிசர்வ் வங்கி உயர்த்தியதன் எதிரொலி யாக, பெரும்பாலும் கார் உள்ளிட்ட வாகனங்களை வாங்குவதற்கான கடனாகவும் தனி நபர் கடனாகவும் வழங்கப்படும் எம்சிஎல்ஆர் கடன்க ளுக்கான (Marginal Cost of Funds Based Landing Rate - MCLR) வட்டி விகிதங்கள் செப்டம்பர் 1 முதல் அதிகரிக்கப்படுகின்றன.

இதன்படி, ஓராண்டு தவணைக் காலம் கொண்ட கடன்களுக்கான வட்டி விகிதம் 7.65 சதவீதத்திலிருந்து 7.70 சதவிகிதமாக உயர்கிறது. மூன்றாண்டு தவணை கடன்களுக்கான வட்டி விகிதம் 0.05 சதவிகிதம் அதிகரித்து 8 சத வீதமாக உயர்த்தப்படுகிறது. இது தவிர, ஒன்று, மூன்று, ஆறு மாத தவணைக் கடன்களுக்கான வட்டி விகிதமும் 7.10 முதல் 7.40 சதவிகிதமாக இருக்கும்” என்று தெரிவித்துள்ளது. இதேபோல இந்தியன் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடன் வட்டி விகிதங்கள் குறித்து வங்கியின் சொத்து பொறுப்பு மேலாண்மைக் குழு, பல்வேறு தவணைக்காலங்களில் வழங்கப்படும் கடன்களுக்கான வட்டி விகிதங்களை உயர்த்த முடிவு செய்துள்ளது. சனிக்கிழமை (செப்.  3) முதல் புதிய விகிதங்கள் அமலுக்கு வருகின்றன. இதன்படி ஓராண்டு கடன்களுக்கான வட்டி விகிதம் 7.65 சதவிகிதத்திற்கு பதிலாக 7.75 சத விகிதமாக இருக்கும். ஒரு நாள் முதல் ஆறு மாதங்கள் வரையிலான கடன்க ளுக்கான வட்டி விகிதம் 0.10 சதவிகிதம் வரை அதிகரிக்கப்பட்டு 6.95 முதல் 7.60 சதவிகிதம் வரை இருக்கும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.