அதானி ஏஐ துறையில் ரூ.9 லட்சம் கோடி முதலீடு
தில்லியில் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) சர்வதேச மாநாடு நடை பெற்று வருகிறது. 5 நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டை பிரதமர் மோடி திங்களன்று மாலை தொடங்கி வைத்தார். இந்நிலையில், ஏஐ மாநாடு தொ டங்கிய 12 மணிநேரத்தில் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) முதலீட்டு அறிவிப்பை, பிரதமர் மோடிக்கு மிக நெருக்க மான அதானி அறிவித்துள்ளார். இது தொடர்பாக அதானி குழுமம் செவ்வா யன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘2035ஆம் ஆண்டிற்குள் புதுப்பிக்கத் தக்க எரிசக்தியால் இயங்கும், செயற்கை நுண்ணறிவுத் திறன் கொண்ட டேட்டா சென்டர்களை உருவாக்க 100 பில்லியன் டாலர் (சுமார் ரூ.9 லட்சம் கோடி) முதலீடு செய்யத் திட்டமிடப்பட் டுள்ளது. இதன் மூலம் உலகின் மிகப்பெரிய ஒருங்கிணைந்த டேட்டா சென்டர் தளத்தை உருவாக்க அதானி குழுமம் இலக்கு நிர்ணயித்துள்ளது. அடுத்த 10 ஆண்டுகளில் இந்தியாவில் 250 பில்லியன் டாலர் மதிப்பிலான ஏஐ உள்கட்டமைப்பு சூழலை இது உரு வாக்கும்” என அதில் கூறப்பட்டுள்ளது.
