states

img

சமஸ்கிருதத்தில் பதவி ஏற்ற ஆச்சார்ய தேவ்விரத்

சமஸ்கிருதத்தில் பதவி ஏற்ற ஆச்சார்ய தேவ்விரத்

மகாராஷ்டிரா ஆளுநராக பதவி ஏற்றுக்கொண்ட ஆச்சார்ய தேவ் சமஸ்கிருதத்தில் பதவி ஏற்றுக்கொண்டுள்ளார். மகாராஷ்டிரா ஆளுநராக இருந்து வந்த சி.பி. ராதாகிருஷ்ணன், குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்றதையடுத்து அவர் ஆளுநர் பதவியை ராஜினாமா செய்தார்.  இதையடுத்து பாஜகவின் முன்னாள் தலைவரும், தற்போதைய குஜராத் ஆளு நராகவும் உள்ள ஆச்சார்ய தேவ்விரத் துக்கு மகாராஷ்டிராவின் ஆளுநராக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டது. இதற் கான உத்தரவை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பிறப்பித்திருந்தார். இந்நிலையில் செப்.15 திங்களன்று மகாராஷ்டிர ஆளுநர் மாளிகையில் ஆச்சார்ய தேவ்விரத் ஆளுநராக பதவி ஏற்றுக்கொண்டார். மும்பை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசேகர் அவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். அப்போது ஆச்சார்ய தேவ்விரத் சமஸ்கிருதத்தில் பதவி யேற்றுக்கொண்டார். இவர், கடந்த 2015 இல் இமாச்சலப் பிரதேச ஆளுநராக நியமிக்கப்பட்டார். பின்னர் 2019 இல்  குஜராத் ஆளுந ராக நியமிக்கப்பட்டார்.