கூட்டாளிகளை காப்பாற்ற முயற்சிக்கக் கூடாது: மோடி அரசுக்கு சீத்தாராம் யெச்சூரி வலியுறுத்தல்
புதுதில்லி, ஜன.29- பங்குச் சந்தையில் மதிப்பை உயர்த்திக் காட்டுவதற்காக மோசடி யில் ஈடுபட்டதாக அதானி நிறு வனத்தின் மீது ஹிண்டன்பேர்க் நிறு வனம் குற்றச்சாட்டியுள்ளது. இந்தக் குற்றச்சாட்டு உண்மையாக இருந்தால் அதானி நிறுவனங்கள் எல்ஐசி-யில் ரூ.74 கோடி அள விற்கு முதலீடு செய்துள்ளது. அர சுக்குச் சொந்தமான வங்கிகளி லிருந்து அதானி குழுமம் 40 சத வீதம் அளவிற்கு கடன்களைப் பெற்றுள்ளது. இதில் பாது காக்கப்பட வேண்டியது பொதுத் துறை நிறுவனங்களும் அவற்றில் முதலீடு செய்துள்ள மக்களும் தான். அதானி போன்ற கூட்டாளிகள் அல்ல” என மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் பொதுச் செய லாளர் சீத்தாராம்யெச்சூரி தெரி வித்துள்ளார் கடந்த புதன்கிழமை, அதானி குழுமத்தின் முதன்மை நிறுவன மான அதானி எண்டர்பிரைசஸ் ரூ.20,000 கோடி பங்குகளை முத லீட்டாளர்களுக்கு வெளியிடு வதற்கு முன் ஹிண்டன்பர்க் நிறு வனம் அதானி குழுமத்திற்கு எதிராக குற்றச்சாட்டுகளை கூறியிருந்தது. ஹிண்டன்பர்க் நிறுவனத்தின் அறிக்கையைத் தொடர்ந்து அதானி குழுமம் ரூ.4.17 லட்சம் கோடியை இழந்துள்ளது.
அதானி குழுமத்தின் மோசடி குறித்து கூறியுள்ள ஹிண்டன்பர்க், “ரூ.17.8 டிரில்லியன் (218 பில்லி யன் டாலர்) மதிப்பிலான பங்கு களைக் கையாள்வதில் மட்டுமல்ல கணக்கியலிலும் மோசடியில் ஈடு பட்டுள்ளது. கடந்த இரண்டாண்டு களாக நாங்கள் நடத்திய விசார ணையில் தெரிய வந்துள்ளது என்று கூறியுள்ளது. “நாங்கள் மோசடி குறித்த அறிக்கையை வெளியிட்டு 36 மணி நேரமாகியும், நாங்கள் எழுப்பி யுள்ள பிரச்சனையை அதானி கவ னிக்கவில்லை. “88 கேள்விகளை நாங்கள் கேட்டுள்ளோம். அவர்கள் அளிக்கும் தகவல்கள் வெளிப்படைத் தன்மைக்கு வாய்ப்பளிக்கும் என்று நாங்கள் நம்புகிறோம். ஆனால், இதுவரை, அதானி எந்தக் கேள்வி களுக்கும் பதிலளிக்கவில்லை.” பங்கு முதலீட்டாளர்கள் தொடங்கி பத்திரிகையாளர்கள், பொதுமக்கள், அரசியல்வாதி கள் வரை தாங்கள்பழிவாங்கப்படு வோம் என்ற பயத்தின் காரணமாக பேசப்பயப்படுகின்றனர். இதனால் தான் அதானி குழுமம் பட்டப்பகலில் மிகப்பெரிய மோசடியை அப்பட்ட மாகச் செய்துள்ளதாக நாங்கள் நம்புகிறோம் எனக் கூறியுள்ளது.
அதானியின் வேஷம்
ஹிண்டன்பேர்க் நிறு வனத்திற்கு பதிலளித்துள்ள அதானி குழுமம், “எங்கள் நிறுவனத்தை பாதிக்கும் மிக மோசமான தகவல்களை எந்த வகையிலும் முழு மையாக ஆய்வு செய்யவில்லை. இந்த அறிக்கை எங்கள் குழுமத்தை மட்டுமல்ல பங்கு முதலீட்டாளர்களையும் பாதிப்பி ற்குள்ளாக்கியுள்ளது. இந்திய பங்குச் சந்தைகளில் ஏற்பட்டுள்ள ஏற்ற இறக்கங்களால் நாங்கள் மிகவும் கவலையடைந்துள்ளோம். வெளிநாட்டு (ஹிண்டன்பர்க்) நிறு வனம் திட்டமிட்டு பொறுப்பற்ற முறையில் தகவல்களை வெளி யிட்டுள்ளது. ஹிண்டன்பர்க் நிறு வனத்திற்கு எதிரான சட்ட நட வடிக்கைக்கு தயாராகி வரு கிறோம்” எனத் தெரிவித்துள்ளது. இந்நிலையில் அமெரிக்க முதலீட்டு ஆராய்ச்சி நிறுவன மான ஹிண்டன்பர்க் நிறுவனம் பங்குகளைக் கையாளுதல் மற்றும் கணக்கியலில் மோசடி செய்துள்ளது. மேலும் அதானி குழுமப் பத்திரங்கள்குறித்து கருத்துக் கேட்டுள்ளதாக மோர்கன் ஸ்டான்லி கேபிடல் இண்டர்நேஷ னல் நிறுவனம் (MSCI) தெரி வித்துள்ளது. இது ஒரு முதலீட்டு ஆராய்ச்சி நிறுவனமாகும்
அதானி குழுமம் மற்றும் நிறுவனங்களின் பங்குப் பத்திரங்கள் தொடர்பாக சமீபத்தில் வெளியிடப்பட்ட அறிக்கைகளை அடுத்து இந்த நடவடிக்கையில் எம்எஸ்சிஐ இறங்கியுள்ளது. ஹிண்டன்பர்க் நிறுவனம் வெளி யிட்டுள்ள தகவல்களைத் தொடர்ந்து, பங்குச் சந்தையில் அதானி குழும பங்குகள் இறங்கு முகத்தை சந்தித்து வருகின்றன எனக் கூறியுள்ள சந்தை வல்லுநர்கள் பங்குச் சந்தையி லிருந்து அதானி குழுமப் பங்குகளை விலக்கி வைக்க வாய்ப்புள்ள தாகவும் தெரிவித்தனர். ஹிண்டன்பர்க் நிறவனத்தின் பதிலை தனது டிவிட்டர் பக்கத்தில் டேக் செய்திருக்கும் பாஜக தலைவர் சுப்பிரமணியன் சுவாமி, அதானி குழுமத்துக்கு எதிராக கயிறு இறுகுகிறதா? இதனை மோடியால் தாங்கிக்கொள்ள முடியுமா? என்று பதிவிட்டுள்ளார். ஹிண்டன்பர்க் நிறுவனத்தின் அறிக்கை குறித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செய லாளர் சீத்தாராம் யெச்சூரி கூறுகை யில், “குற்றச்சாட்டுகள் உண்மை யாக இருந்தால், எல்ஐசி மற்றும் எஸ்பிஐயில் வாழ்நாள் முழுவதும் சேமிப்பை வைத்திருக்கும் கோடிக்கணக்கான மக்களின் வாழ்க்கை கேள்விக்குறியாகும். அதானி நிறுவனங்கள் எல்ஐசி-யில் ரூ.74 கோடி அளவிற்கு முதலீடு செய்துள்ளன. அரசுக்குச் சொந்த மான வங்கிகளிலிருந்து அதானி குழுமம் 40 சதவீதம் அளவிற்கு கடன்களைப் பெற்றுள்ளது. இதில் பாதுகாக்கப்பட வேண்டியது பொதுத்துறை நிறுவனங்களும் அவற்றில் முதலீடு செய்துள்ள மக்க ளும் தான். கூட்டாளிகள் அல்ல” எனத் தெரிவித்துள்ளார்.