தேங்கிக் கிடக்கும் 5.23 கோடி வழக்குகள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தகவல்
நாடு முழுவதும் 5.23 கோடி வழக்குகள் தேங்கி கிடக்கிறது என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.காவய் கூறியுள்ளார். ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் நடை பெற்ற 2ஆவது தேசிய மத்தியஸ்த மாநாட் டில் அவர் மேலும் கூறுகையில்,”நாடு முழுவதும் 5.23 கோடி வழக்குகள் தேங்கி கிடக்கின்றன. இதனால் நீதித்துறை யின் மீது பெரும் சுமை ஏற்பட்டுள்ளது. இந்தச் சுமையைக் குறைப்பதற்காக வழக்குகளை நீதிமன்றத்திற்கு வெளியே பேசித் தீர்க்கும் மத்தியஸ்த முறையை ஒன்றிய அரசு ஊக்குவித்து வருகிறது. இது நீதிமன்றங்களின் பணிச் சுமையைக் குறைப்பதில் சமரசம் முக்கிய கருவியாக விளங்குகிறது. அதனால் நீதிமன்றங்களில் தேங்கிக் கிடக்கும் கோடிக்கணக்கான வழக்குகளுக்குத் தீர்வு காண, மத்தியஸ்தம் மற்றும் கிராமப்புற அளவிலான நீதி முறைகளே சிறந்த வழி ஆகும்” என அவர் கூறினார்.
