states

தீக்கதிர் விரைவு செய்திகள்

வாக்கு திருட்டு விவகாரத்தில் தேர்தல் ஆணை யம், பாஜக மீது ராகுல் காந்தி தீவிர குற்றச் சாட்டுகளை முன்வைத்து செய்தி மடல் வடிவில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள உத்தரகாசி மாவட்டத்தில் உள்ள யமுனையின் பள்ளத் தாக்கு பகுதியில் சனிக்கிழமை அன்று மேகவெடிப்பு ஏற்பட்டது. இதனால் நவுகான் பகுதியில் பெரும் சேதம் ஏற்பட்டது. இந்த பாதிப்பில் அங்குள்ள வீடு ஒன்று மண்ணுக்குள் புதைந்தது. மேலும், அந்தப் பகுதி யில் உள்ள சில வீடுகளை சேற்று நீர் சூழ்ந்தது. சேதம்தொ டர்பாக தெளிவான அறிக்கை எதுவும் வெளியாகவில்லை.

பஞ்சாப் மாநிலத்தில் வெள்ளத்தால் விடுமுறை அளிக்கப்பட்டிருந்த நிலையில் செப்.9ஆம் தேதி அரசுப் பள்ளிகள் திறக்கப்படும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

சுதர்சன் ரெட்டிக்கு  மஜ்லீஸ் கட்சி ஆதரவு

குடியரசுத் துணை தலைவர் தேர்தல் செப்., 9ஆம் தேதி நடை பெறுகிறது. பாஜக தலைமையி லான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் மகாராஷ்டிரா ஆளுநர் சி.பி.ராதாகிருஷ் ணனும், “இந்தியா” கூட்டணி சார்பில் உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதிசுதர் சன் ரெட்டியும் போட்டியிட உள்ளனர். இந்நிலையில், இந்த குடியரசுத் துணை தலைவர் தேர்தலில் போட்டி யிடும் “இந்தியா” கூட்டணி வேட்பாளர் சுதர்சன் ரெட்டிக்கு ஓவைசியின் அகில இந்திய மஜ்லீஸ் கட்சி ஆதரவு தெரி வித்துள்ளது. இது குறித்து அந்தக் கட்சியின் தலை வர் அசாதுதீன் ஓவைசிஎம்.பி., தனது டுவிட்டர் எக்ஸ் பக்கத்தில், “தெலுங்கா னா முதலமைச்சர் அலுவலகம் தொ டர்பு கொண்டு சுதர்சன் ரெட்டிக்கு  ஆதரவு அளிக்குமாறு கேட்டுக்கொண் டது. ஹைதராபாத்தைச் சேர்ந்த சட்ட வல்லுநருமான சுதர்சன் ரெட்டிக்கு அகில இந்திய மஜ்லீஸ் கட்சி ஆத ரவை வழங்கும். சுதர்சன் ரெட்டியிடம் நான் பேசி, அவருக்கு எனது வாழ்த்துக் களை தெரிவித்தேன்” என அதில் கூறப்பட்டுள்ளது.

விநாயகர் சிலை கரைப்பு நிகழ்வில் 4 பேர் பலி 13 பேர் மாயம்

நாடு முழுவதும் ஆகஸ்ட் 27ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி தொடங்கியது. மற்ற மாநிலங்க ளை விட மகாராஷ்டிராவில் விநாயகர் சதுர்த்தி விழா பிரம்மாண்டமாக கொண் டாடப்படும். அங்கு கடந்த 10 நாட்கள் சிறப்பு கொண்டாட்டங்களுடன் சனிக்கிழ மையன்று மகாராஷ்டிரா முழுவதும் விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டன. இந்நிலையில், மகாராஷ்டிரா முழு வதும் விநாயகர் சிலை கரைப்பின் போது தண்ணீரில் மூழ்கி 4 பேர் உயிரிழந்த னர். மேலும் 13 பேர் காணாமல் போ யுள்ளனர். புனே, தானே மாவட்டங்களில் அதிகளவில் காணாமல் போயுள்ளனர் எனக் கூறப்படுகிறது. காணாமல் போன வர்களை தேடும் பணி நடைபெற்று வருகிறது. இதனால் பலி எண்ணிக்கை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.