states

img

3 பேருக்கு  மருத்துவ நோபல்

3 பேருக்கு  மருத்துவ நோபல்

உலக அளவில் மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், பொருளாதாரம், அமைதி ஆகிய துறைகளில் மகத்தான சாதனை படைப்பவர்களுக்கு ஆண்டு தோறும் நோபல் பரிசு வழங்கப்படுகிறது. நோபல் பரிசு ஒரு பதக்கம், சான்றிதழ் மற்றும் ரொக்கப்பரிசு அடங்கியது. இந்நிலையில், ஸ்வீடன் நாட்டின் தலைநகர் ஸ்டாக்ஹோமில் 2025ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசு திங்கள் முதல் அறிவிக்கப்படுவதாக கடந்த வாரம் தகவல் வெளியானது. இந்த அறிவிப்பின் படி மருத்துவத்திற்கான நோபல் பரிசு திங்களன்று அறிவிக்கப்பட்டது. புற நோய் எதிர்ப்பு சகிப்புத்தன்மை குறித்த ஆய்வுக்காக அமெரிக்காவைச் சேர்ந்த மேரி பிரங்கோ, பிரட் ராம்ஸ்டெல், ஜப்பா னைச் சேர்ந்த ஷிமொன் சகாகுச்சி ஆகி யோர் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக நோபல் பரிசு கமிட்டி அறிவித்துள்ளது.