states

img

முதல்வர், அமைச்சர்களுக்கு 50 சதவிகிதம் சம்பள உயர்வு...

மக்கள் பணத்தை எடுத்து கர்நாடக பாஜக அரசு சூறை

பெங்களூரு, பிப்.24- கர்நாடக மாநில பாஜக அரசா னது, முதல்வர், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்களுக்கான ஊதியம், படிகள், வீட்டுவாடகை, பரா மரிப்பு உள்ளிட்டவற்றுக்கான தொகையை 50 சதவிகிதம் வரை அதிரடியாக உயர்த்தியுள்ளது. கர்நாடக முதல்வரின் சம்பளம் மாதம் ரூ. 50 ஆயிரமாக இருந்தது, தற்போது ரூ. 75 ஆயிரமாகவும், அமைச்சர்களின் சம்பளம் ரூ. 40 ஆயிரத்திலிருந்து ரூ. 60 ஆயி ரமாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் முதல்வர் மற்றும் அமைச்சர்களுக்கான சம்ப்ச்சுவரி கொடுப்பனவு (sumptuary allowance) ஆண்டுக்கு ரூ. 3 லட்சத்தில் இருந்து ரூ. 4.50 லட்ச மாகவும், அமைச்சர்களின் வீட்டு வாடகை கொடுப்பனவு மாதம் ரூ.  80 ஆயிரத்திலிருந்து ரூ. 1 லட்சத்து 20 ஆயிரமாகவும், குடியிருப்பு மற்றும் தளவமைப்பு மற்றும் தோட்டங்களின் பராமரிப்பு மற்றும் பிற பராமரிப்புக்கான கொடுப்பனவு மாதத்திற்கு ரூ. 20 ஆயிரத்திலிருந்து ரூ. 30 ஆயிரமாகவும் உயர்த்தப் பட்டுள்ளது.

எல்லாவற்றுக்கும் மேலாக, முதல்வர் மற்றும் அமைச்சர்களுக் குப் பெட்ரோல் செலவுகளுக்கு அளிக்க வேண்டிய கொடுப்பனவு, ஆண்டுக்கு முன்பு 1000 லிட்டராக இருந்தது, தற்போது 2 ஆயிரம் லிட்ட ராகவும், அமைச்சர்களின் ஒரு நாள் சுற்றுலா உதவித்தொகை ரூ. 2 ஆயி ரத்து 500 ஆகவும் உயர்த்தப்பட் டுள்ளது. சட்டப் பேரவைத் தலைவர் பதவி யில் இருப்பவர்களின் சம்பளம் ரூ. 50 ஆயிரத்திலிருந்து ரூ. 75 ஆயிர மாகவும், எதிர்க்கட்சித் தலைவர் களின் மாதச்சம்பளம் ரூ. 40 ஆயி ரத்திலிருந்து ரூ. 60 ஆயிரமாகவும், சட்டமன்ற உறுப்பினர்களின் சம்ப ளம் ரூ. 25 ஆயிரத்திலிருந்து ரூ. 40 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது.  சட்டமன்ற உறுப்பினர்களுக் கான சம்ப்ச்சுவரி கொடுப்பனவும் (sumptuary allowance) ஆண்டுக்கு ரூ. 3 லட்சத்தில் இருந்து ரூ. 4 லட்ச மாக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் பயணக் கொடுப்பனவு மாதம் 60 ஆயிரம் ரூபாயாகவும், பென்ஷன் 50 ஆயிரம் ரூபாயாகவும் உயர்த்தப் பட்டுள்ளது.