states

img

வரி வசூலில் ‘சாதனை’ படைத்த மோடி அரசு!

புதுதில்லி, மார்ச் 18 - 2021-22 நிதியாண்டில், வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு நேரடி வரி வசூலில், நரேந்திர மோடி அரசு ‘சாதனை’ படைத்துள்ளது. இதுதொடர்பாக ஒன்றிய அரசின் நேரடி வரிகள் வாரியத் தலைவர் ஜே.பி. மொகபத்ரா  பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில், நடப்பு நிதியாண்டில் இதுவரை நிகர வரி  வசூல் ரூ. 13 லட்சத்து 63 ஆயிரம் கோடியாக உள்ளது என்றும், இது கடந்த ஆண்டைவிட 48.4 சதவிகிதம் அதிகம் என்று அவர் கூறியுள்ளார். “நிகர நேரடி வரி வசூலானது, கடந்த 2018-19 நிதியாண்டில் ரூ. 11 லட்சத்து 18 ஆயி ரம் கோடி, 2019-20 நிதியாண்டில் ரூ. 10 லட்சத்து  28 ஆயிரம் கோடி, 2020-21 நிதியாண்டில் ரூ.  9 லட்சத்து 24 ஆயிரம் கோடி என்ற அளவில்  வசூலாகி இருந்தது. ஆனால், நடப்பு நிதியா ண்டில் முன்கூட்டிய வரி செலுத்துதல் பிரி வின் கீழ், வரி வருவாய் 41 சதவிகிதம் அதி கரித்ததன் மூலம் 2021-22 நிதியாண்டின் நிகர  நேரடி வரி வசூலானது 2020-21 நிதியாண்டை விட 48.4 சதவிகிதம் அதிகரித்துள்ளது.

மேலும், இது 2019-20 வரி வசூலை விட 42.5 சதவிகிதமும், 2018-19 வரி வசூலை  விட 35 சதவிகிதமும் அதிகம் என்பதுடன், கடந்த நான்கு ஆண்டுகளில் இல்லாத நிகர வரி வசூலாகும். 2021-22 நிதியாண்டின் மொத்த வரி வசூலைப் பொறுத்தவரை, இதுவரை ரூ. 15 லட்சத்து 50 ஆயிரம் கோடியாக உள்ளது. இது 2020-21 நிதியாண்டை விட 38.3 சத விகிதமும், 2019-20 நிதியாண்டை விட 36.6 சதவிகிதமும், 2018-19 நிதியாண்டை  விட 32.7 சதவிகிதமும் அதிகம் ஆகும். இதுவரை ரூ. 12 லட்சத்து 79 ஆயிரம் கோடிக்கு மேல் வசூலை தாண்டியதில்லை. இந்த ஆண்டு, ரூ. 15 லட்சம் கோடி என்ற மொத்த வரி வசூலை தாண்டி உள்ளோம். இந்த வரி வசூல், வருமான வரித்துறை வர லாற்றில் எல்லா வகையிலும் அதிகம்” என்று மொகபத்ரா தெரிவித்துள்ளார். 2021-22 நிதியாண்டில் நேரடி வரி ரூ. 162  லட்சத்து 50 ஆயிரம் கோடியாக இருக்கும் என்று கணிக்கப்பட்டு இருந்தது. ஆனால், கணிப்புகளைக் கடந்து தற்போது ரூ. 13 லட்சத்து 63 ஆயிரம் கோடியாக அது அதி கரித்துள்ளது.  அந்த வகையில், 2021-22 நிதியாண்டிற் கான நேரடி வரியில் சுமார் 53 சதவிகிதம் பெருநிறுவன வரியாகவும், சுமார் 47 சதவிகித மானது தனிநபா் வருமான வரி, பங்கு பரிமாற்ற வரி உள்ளிட்டவை மூலமாகவும் கிடைத்துள்ளது. இந்த வரி வசூலும், மார்ச் 16-ஆம் தேதி  வரையிலான கணக்கு மட்டுமே ஆகும். மார்ச் 31-க்குப் பிறகு இது மேலும் அதிகரிக்க லாம் என்பது குறிப்பிடத்தக்கது. நேரடி வரி என்பது, ஒருவர் அர சாங்கத்திற்கு நேரடியாக செலுத்தும் வரு மான வரி, சொத்து வரி, சொத்து மதிப்பு மீதான வரிகளை உள்ளடக்கியதாகும்.