states

குடியரசு துணைத் தலைவர் தேர்தல் 13 எம்.பி.,க்கள் புறக்கணிப்பு

குடியரசு துணைத் தலைவர் தேர்தல் 13 எம்.பி.,க்கள் புறக்கணிப்பு

குடியரசு துணைத் தலைவர் தேர்தல் செவ்வாய்க்கிழமை காலை நடைபெற்றது. இந்த தேர்தலில் பிஜு ஜனதா தளம் கட்சியின் சஸ்மித் பத்ரா, ரஞ்சன் மங்கராஜ், சுலதா தியோ, முன்னா கான், நிரஞ்சன் பிஷ்யா, தேபாஷிஷ் சமந்த்ரே மற்றும் சுபாஷிஷ் குந்தியா ஆகியோர் வாக்களிக்கவில்லை. பாரத ராஷ்டிர சமிதி (பிஆர்எஸ்) கட்சியில் கே.ஆர்.சுரேஷ் ரெட்டி, ரவி சந்திரா வத்திராஜூ, தாமோதர் ராவ், பார்த்தசாரதி ரெட்டி ஆகியோர் வாக்களிக்கவில்லை. அதே போல சிரோன்மணி அகாலிதளம் கட்சியின் ஹர்சிம்ரத் கவுர் மற்றும் சுயேட்சை எம்.பி. சரம்ஜீத் சிங் உள்ளிட்டோரும் குடியரசு துணைத் தலைவர் தேர்தல் வாக்களிப்பதில் இருந்து விலகியுள்ளனர்.