states

img

திரிபுரா சட்டப்பேரவையில் ஆபாச படம் பார்த்த பாஜக எம்எல்ஏ

திரிபுரா சட்டப்பேரவையில் பாஜக எம்.எல்.ஏ ஜதாப் லால் நாத், ஆபாச படம் பார்க்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

வடக்கு திரிபுராவில் உள்ள பக்பசா தொகுதியின் எம்.எல்.ஏ-வாக பாஜக-வை சேர்ந்த ஜதாப் லால் நாத் இருக்கிறார். திரிபுரா மாநில பட்ஜெட் தொடர்பான விவகாரங்கள் குறித்து சட்டப்பேரவையில் விவாதம் நடைபெற்று கொண்டிருந்தது. அந்த விவாதத்தில் சபாநாயகரும், எம்.எல்.ஏ.க்களும் பேசிக்கொண்டிருக்கும் போது, ஜதாப் லால் நாத் ஆபாச படம் பார்த்துக்கொண்டிருந்தார். இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

முன்னதாக 2012-ஆம் ஆண்டில், கர்நாடகாவில் பாஜக எம்.எல்.ஏக்களான லக்ஷ்மண் சவாதி மற்றும் சிசி பாட்டீல், மாநில சட்டப்பேரவையில் செல்போன்னில் ஆபாச படம் பார்த்து சிக்கிக்கொண்டனர். பின்னர் அவர்கள் எந்த தவறும் செய்யவில்லை என்று கூறி கட்சியில் மீண்டும் சேர்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

;