states

img

கணக்கோடு கை கோர்க்கலாம் - மொ.பாண்டியராஜன்

இந்த பகுதியில் ஒரு வரலாற்று செய்தியை அறிந்து கொண்டு செல்லலாம். முக்கியமாக நூல கம். அலெக்சாண்டர் இறந்த பிறகு அலெக்  சாண்டரியாவின் பல பகுதிகளில் இருந்த  தளபதிகள் தங்களுக்குள் சண்டை  போட்டுக்கிட்டாங்க. சில ஆண்டுகளுக்கு  பிறகு இணைந்து ஒரு ஒப்பந்தத்தை ஏற் படுத்தி பகுதிகளை பிரிச்சிக்கிட்டாங்க. இதுல ஒரு பகுதி தாலமி வம்சத்தை சேர்ந்தவர்கள் ஆட்சி செய்தாங்க. அவர்  களுடைய ஆட்சி பகுதியில் எகிப்தும்  அடங்கும். இங்கும் ஒரு அலெக்சாண்ட ரியா உண்டு இது நைல் நதிக்கரையில்  உள்ளது. இங்கே சொல்லிக் கொடுப்ப தற்கும் ஆராய்ச்சி செய்வதற்கும் ஒரு அருங்காட்சியகம் உருவாக்குனாங்க. அதுல கவிதை, நடனம், இசை, வர லாறு, வானியல், கணக்கு கற்றுக் கொடுத்  தாங்க. அதன் நுழைவு வாயிலிலி ஒரு சிற்பம் வச்சாங்க. அந்த சிற்பத்தின் பெயர்  மியூசஸ் என்பதாகும். இது ஒரு பெண் தெய்வம். இந்த பெயரிலிருந்துதான் மியூ சியம் என்ற பெயர் உருவானதாக சொல்லு ராங்க. அலெக்சாண்டரியா மியூசியத்துல மிகவும் முக்கியமானது நூலகம். தாலமி  அரசர்களின் நன்கொடையால் நூலகம் பராமரிக்கப்படது. அதன் முக்கிய குறிக்  கோள் என்ன தெரியுமா. கிரேக்க மொழி யில் எழுதப்பட்ட நூல்கள் அனைத்தை யும் சேகரிப்பதாகும். இதற்காக அவர்கள்  ஒரு அரசாணையை வெளிட்டார்கள்.

அரசாணை

“அலெக்சாண்டரியா நகர துறைமுகத்  தில் நங்கூரம் பாய்ச்சும் கப்பல்கள் எல் லாம், தங்களின் கப்பல்களில் இருக்கும் பாப்பிரஸ்கள் அனைத்தையும் அருங் காட்சியகத்தில் கொடத்திட வேண்டும். அருங்காட்சியகத்தில் அவை பிரதி எடுக்கப்படும். அந்தப் பிரதிகளே அந்த  கப்பல்களுக்கு திருப்பிக் கொடுக்கப் படும்.” இதனால் அங்கே மூன்று லட்சம் கிரேக்க கையெழுத்துப் பிரதிகள் சேகரிக்  கப்பட்டு பாதுகாக்கப்பட்டன. இவை தவிற  மேலும் இரண்டு லட்சம் கையெழுத்துப் பிரதிகள்அருகில் இருந்த சராபிஸ் கோவிலில் (Temple of Sarapis). இக்கோயில் பகுதி நேர நூலகமாகவும் செயல்பட்டது. எகிப்தின் நைல் நதிக்கரையில் பாப்பி ரஸ் என்னும் புதர் செடி வளர்கிறது. நாணல் போன்ற இந்த செடிகளின் தண்டு களை பிழிந்து, வெள்ளை பசைப்  போன்ற கூழிலிருந்து தயாரிக்கப்படு கிறது. இதிலிருந்து தடித்த காகிதம் தயா ரிக்கப்பட்டதால் அதற்கு பெயர் பாப்பி ரஸ்ன்னு பெயர் வச்சிருக்காங்க. கி.மு.3150 முதல் கி.மு.2686 வரை இருந்த துவக்க கால எகிப்து அரசர்கள் இந்த நாணல் போன்ற செடியிலிருந்து காகிதம், செருப்பு, தரைவிரிப்பு, கயிறு, கூடைகளை தயார் செஞ்சாங்க. அந்த  தடித்த காகிதத்துலதான் அரசர்களின் வர லாற்று குறிப்புகள், கணித குறிப்புகள்,  மருத்துவ குறிப்புகள். பிரமீடு குறிப்பு களை எழுதி சேமிச்சு வச்சிருக்காங்க.

எகிப்தில் வளரும் பாப்பிரஸ்

இப்படி எழுதப்பட்ட பப்பிரஸ் கையெ ழுத்துப் பிரதிகளைதான் அலெக்சாண்ட ரியாவில் சுமார் ஐந்து லட்சம் பிரதிகள் அருங்காட்சியகத்தில் சேகரித்து வைக்கப்பட்டிருந்திருக்கின்றன. சேக ரிக்கப்பட்ட இந்த நூலகம் ஒரு மிகச்  சிறந்த மற்றொரு நூலையும் சிறந்த கணித வியல் அறிஞரையும் உருக்கியுள்ளது. அவருடைய கணக்கோடு கை கோர்க்க லாம்.