ரஷ்யா மற்றும் லாட்வியா எல்லையில் பதற் றத்தை ஏற்படுத்தும் வேலையில் அமெரிக்கா ஈடுபட்டிருக்கிறது. தனது ராணுவக் கூட்டணியின் போர்ப் பயிற்சியை எல்லையில் தொடங்கியுள் ளது. உக்ரைனை சிக்கலில் மாட்டிவிட்ட அமெரிக் கா, லாட்வியாவையும் நெருக்கடிக்கு உள்ளாக்கும் வகையில் இந்த பயிற்சி நடக்கிறது. மே 27 ஆம் தேதி வரையில் இந்தப் பயிற்சி நடைபெறவுள்ளது.
இஸ்ரேலில் இருந்து வாங்கிய உளவு மென் பொருள் மூலமாக கடலோனியத் தலைவர் களை ஸ்பெயின் உளவு பார்க்கிறது என்ற குற்றச் சாட்டு எழுந்துள்ளது. இது குறித்து கடலோனியப் பகுதியின் தலைவர்களில் ஒருவரான பெரி அரகோன்ஸ் கூறுகையில், “இது நியாயப் படுத்தவே முடியாத அவமானமாகும். அடிப்படை உரிமைகள் மற்றும் ஜனநாயகத்தின் மீதான கடு மையான தாக்குதலாகவே இதைப் பார்க்க வேண்டியுள்ளது” என்று தெரிவித்தார்.
இத்தாலியின் பிரதமரான மரியோ டிராகி கொ ரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார் என்று அந்நாட்டு அரசு உறுதிப்படுத்தியுள்ளது. 74 வயதா கும் அவர் கொரோனாவுக்கான அறிகுறிகள் எது வும் இல்லையென்றாலும், பரிசோதனையில் தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. அரசு வெளி யிட்டுள்ள அறிக்கையின்படி, பிரதமர் தனிமை யில் இருக்கிறார். முழுமையாக தடுப்பூசி செலுத்தி யுள்ளார் என்று கூறப்பட்டுள்ளது.
“அஜய் மிஸ்ராவை மோடி எப்போது தனது அமைச்சரவையில் இருந்து நீக்குவார்? விவசாயிகளுக்கு துரோகம் செய்வதையும், கொலையாளியை ஊக்கப்படுத்துவதையும் பாஜக எப்போது நிறுத்தும்? இன்னும் எத்த னை காலத்திற்குத்தான் மோடி அரசு விவசாயிகளை ஒடுக்கும்?” என காங்கிரஸ் பொதுச்செயலாளர் ரன்தீப் சுர்ஜேவாலா கேள்வி எழுப்பியுள்ளார்.
கேரளாவில் நடிகையை கடத்தி, பாலியல் வன்கொடுமைக்கு உள்ளா க்கிய குற்றத்தில் கைது செய்யப்பட்ட நடிகர் திலீப், விசாரணையின்போது, அதிகாரிகளை மிரட்டியதாகவும் கைது செய்யப்பட்டார். இதனிடையே இந்தக் குற்றச்சாட்டை ரத்துசெய்யக் கோரியும், வழக்கை சிபிஐ விசார ணைக்கு மாற்றக் கோரியும், அவர் நீதிமன்றத்தை நாடியிருந்த நிலையில், கேரள உயர் நீதிமன்றம் அவரது கோரிக்கையை நிராகரித்துள்ளது.
ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வரும் மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவரு மான மெகபூபா முப்தி, காங்கிரஸ் தலைவா் சோனியா காந்தியை தில்லியில் அவருடைய இல்லத்தில் திங்கள்கிழமை சந்தித்துப் பேசினார்.