சின்னாளப்பட்டி, செப்.21 - திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள வக்கம்பட்டி கிராமத்தில் புதிய முழுநேர ரேசன் கடையை ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார். பின்னர் அமைச்சர் ஐ.பெரியசாமி பேசியதாவது: தமிழக முதல்வர் மக்களுக்காக பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து, தொடர்ந்து செயல்படுத்தி வரு கிறார். மக்களின் தேவை யறிந்து தேர்தல் நேரத்தில் அறிவிக்காத பல்வேறு திட்டங்களையும் நிறைவேற்றி வருகிறார். பெண்களின் வளர்ச்சிதான் நாட்டின் உண்மையான வளர்ச்சி என்பதை கருத்தில் கொண்டு, கட்டணமில்லா பேருந்து பயண திட்டம், பெண்களின் உயர்கல்வியை ஊக்கப் படுத்தும் புதுமை பெண் திட்டம் மற்றும் மாதம் ரூ.1000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் காஞ்சிபுரம் மாவட்டத்தில் தொடங்கப்பட்டு, தமிழகம் முழுவதும் வழங்கப் பட்டுள்ளது, தகுதியுள்ளவர்கள் விடுபட்டிருந்தால் நம்பிக்கையோடு மேல்முறையீடு செய்யுங்கள். அவர்களில் யாரும் நிராகரிக்கப்பட மாட்டார்கள். தகுதியுள்ள அனைத்து பயனாளிகளுக்கும் மகளிர் உரிமைத் தொகை கிடைக்கும். மேலும் குடும்ப அட்டைதாரர்கள் தாங்கள் வசிக்கும் பகுதியிலேயே குடிமைப் பொருட் களை பெறும் வகையில் நியாய விலைக் கடைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. ஆயிரத்திற்கும் அதிகமான குடும்ப அட்டைகள் உள்ள நியாயவிலைக் கடைகள் பிரிக்கப்பட்டு, புதிதாக முழுநேர நியாய விலைக் கடைகள் மற்றும் பகுதிநேர நியாய விலைக்கடைகள் உரு வாக்கப்பட்டு வருகின்றன. இதனால் பொது மக்களின் சிரமங்கள் தவிர்க்கப்படுகின்றன. தேவைக்கேற்ப இன்னும் புதிய நியாய விலைக்கடைகள் அமைக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.