states

மகளிர் மசோதா மக்களவையில் நிறைவேற்றம்

புதுதில்லி, செப். 20 - மகளிர்க்கு 33 சதவிகித இடஒதுக்கீடு வழங்கும் மசோதா மக்களவையில் புதன்கிழமை  நிறைவேறியது. மக்களவையில் புதன ன்று நாள் முழுவதும் நடை பெற்ற விவாதத்திற்குப் பிறகு நடைபெற்ற வாக் கெடுப்பில், 454 உறுப்பினர் கள் மசோதாவுக்கு ஆதர வாகவும், 2 உறுப்பினர்கள் மட்டுமே எதிர்த்து வாக்க ளித்ததாகவும் தெரிவித்த சபாநாயகர் ஓம் பிர்லா, மசோதா நிறைவேறியதாக அறிவித்தார். முன்னதாக நடைபெற்ற விவாதத்தில், காங்கிரஸ், இடதுசாரிகள், திமுக, திரிணாமுல், என்சிபி, ஐக்கிய ஜனதாதளம், சமாஜ் வாதி, பகுஜன் சமாஜ் உள்ளி ட்ட பிரதான அரசியல் கட்சி களின் உறுப்பினர்கள் பங்கேற்று தங்களின் வாதங்களை வைத்தனர். மசோதாவை கொள்கை அளவில் ஆதரிப்பதாகவும்; எனினும் இதனை நடை முறைப்படுத்துவதற்கு, மக்கள் தொகைக் கணக் கெடுப்பு, தொகுதி மறுவரை யறை நிபந்தனைகள் தேவையற்றது; பட்டியல் வகுப்பு - பழங்குடியினரோடு சேர்த்து, இதர பிற்படுத்தப் பட்ட வகுப்புப் பெண்கள், முஸ்லிம் பெண்களுக்கும் உள்ஒதுக்கீடு வழங்கி, மசோதாவை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.