விக்கிரவாண்டி-கும்பகோணம் சாலை மிகமோசமாக உள்ளது. இந்தசாலையை அகலப்படுத்தும் பணிகளை விரைந்து முடிக்க அரசு நடவடிக்கை எடுக்குமா என்று சட்டப்பேரவையில் மனிதநேய மக்கள் கட்சி உறுப்பினர் ஜவாஹிருல்லா கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்த நெடுஞ் சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு: தஞ்சாவூர்-விக்கிரவாண்டி சாலைப் பணியை விக்கிரவாண்டி-சேத்தியாதோப்பு, சேத்தியாதோப்பு-சோழவரம், சோழவரம்-தஞ்சாவூர் என்று மூன்று பிரிவாகளாக மூன்று ஒப்பந்ததார்கள் செய்து வருகிறார்கள். இதில் 37 கி.மீ கொண்ட மூன்றாவது தொகுப்பு பணியை வட மாநிலத்தை சேர்ந்த பட்டேல் என்கிற ஒப்பந்ததாரர் செய்து வருகிறார். ஆட்சி மாற்றத்திற்கு பிறகு, மூன்று முறை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறோம். தலைமைச் செய லாரும், நானும் ஒன்றிய அரசுக்கு கடிதம் எழுதியிருக்கிறோம். இந்த சாலை அமைப்பதற்கு நிலம் எடுப்பு மற்றும் மின்கம்பங்கள் அகற்றுவதில் பிரச்சனை இருக்கிறது. இதில், மாநில அரசால் எந்தெந்த பணிகளை விரைந்து செய்ய முடியுமோ? அதை அனைத்தும் விரைந்து முடித்து கொடுக்கப்படும். அதன்படி, பட்டேல் நிறுவனம் இந்த ஆண்டின் இறுதிக்குள் இந்த சாலைப் பணியை முழுமையாக முடித்துக் கொடுப்பதாக வாக்குறுதி கொடுத்துள்ளது.