states

img

மகளிர் உரிமைத் தொகை நிராகரிப்பு: செப்.19 முதல் மீண்டும் விண்ணப்பிக்கலாம்

சென்னை, செப். 18- கலைஞர் மகளிர் உரிமைத்  திட்டத்தில் நிராகரிக்கப்பட்ட வர்கள் செப்.19 முதல் மீண்டும் விண்ணப்பிக்கலாம் என தமிழ் நாடு அரசு தெரிவித்துள்ளது. கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்திற்கு மாநிலம் முழுவதும் இரண்டு கட்டடங்களாகவும் விடுபட்டவர்களுக்கு 18.8.2023 முதல் 20.8.2023 வரை சிறப்பு  முகாம் மூலமாகவும் விண்ணப் பங்கள் பெறப்பட்டு பதிவு செய்யப்பட்டன. பெறப்பட்ட விண்ணப்பங்கள் அனைத்தும் அரசிடம் உள்ள  பல்வேறு தகவல் தரவு தளங்க ளில் உள்ள தகவல்களுடன் ஒப்பிட்டு சரிபார்க்கப்பட்டது. மேலும், அரசு அலுவலர்கள் நேரடி  கள ஆய்வுகள் மூலம் சரிபார்க் கப்பட்டது. அதன்பிறகு, திட்ட விதிமுறை களை பூர்த்தி செய்த 1.065 கோடி மகளிர் பயனாளிகளாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். தகுதி இல்லாத சுமார் 56 லட்சத்து  50 ஆயிரம் மனுக்கள் நிராகரிக் கப்பட்டன. இதனைத் தொடர்ந்து, அண்ணா பிறந்த நாளான வெள்ளிக்கிழமை (செப்.15) காஞ்சிபுரத்தில் நடைபெற்ற அரசு விழாவில், தமிழ்நாடு முழு வதும் 1.06 கோடி மகளிர் பயன் பெறும் வகையில், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த நிலையில், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் மேல்முறையீடு செய்தல் குறித்த வழிகாட்டு நெறிமுறைகளை தமிழ்நாடு அரசு வெளியிட்டது.

அதன்படி, விண்ணப்ப தாரர்களின் விண்ணப்ப முடிவு நிலை குறித்து குறுஞ்செய்தி பதிவு செய்யப்பட்ட கைபேசி எண்ணிற்கு செப்.18 அன்று அனுப்பி வைக்கப்பட்டது.  நிராகரிக்கப்பட்டவர்கள் மீண்டும் விண்ணப்பிக்கலாம். இதில் மேல்முறையீடுகள், அரசு  தகவல் தரவு தளங்களில் இ-சேவை மையங்களில் உள்ள  தகவல்களுடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டு, மேல்முறை யீட்டு அலுவலராகச் செயல்படும் வருவாய் கோட்டாட்சியருக்கு அனுப்பி வைக்கப்படும். வருவாய் கோட்டாட்சியர் மேல்முறையீட்டு விண்ணப்பங் களை விசாரணை செய்வார். தகுதியான நபர்களுக்கு 30 நாட்களுக்குள் கோட்டாட்சியர் மூலம் நடவடிக்கை எடுக்கப் படும். மேலும், மகளிர் உரிமைத் திட்டத்தில் விண்ணப்பித்து நிராகரிக்கப்பட்டவருக்கு  உதவி மையம் திறக்கப்படுகிறது. இதில், ஏற்கப்பட்ட விண்ணப்பங்களின் வங்கி கணக்குக்கு தொகை வரா மல் இருப்பது உள்ளிட்ட சந்தே கங்களுக்கு தீர்வு காணலாம். சென்னையில் உள்ள 15 மண்ட லங்களில் உதவி மையம் செயல் படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  இந்த மேல்முறையீடு நடை முறைகள் அனைத்தும் இணைய தளம் வழியாக மட்டுமே செய்யப் படும் என்று அரசு தெரிவித் திருக்கிறது.