states

சிபிஐ விசாரணை அறிக்கையை ஆட்சேபித்து மறு விசாரணை நடத்தக்கோரி மனு தாக்கல்

தூத்துக்குடி, ஜூன் 7- தூத்துக்குடியில் சுற் றுச்சூழல் பாதிப்புக்களை ஏற்படுத்தி இயங்கி வந்த  ஸ்டெர்லைட்  ஆலையை  மூடக்கோரி அமைதியாக நடைபெற்ற போராட்டத்  தின் போது காவல்துறை யினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் கொல்லப் பட்டனர். துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த சென்னை  உயர்நீதிமன்ற மதுரை கிளை  உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து சிபிஐ விசா ரணை நடத்தி நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய் தது. இந்த அறிக்கையை ஆட்சேபித்து மறு விசா ரணை நடத்தக் கோரியும்  சம்பந்தப்பட்ட காவல்துறை யினர், வருவாய்த் துறை யினர் அனைவர் மீதும் கொலை வழக்கு உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப் பதிவு  செய்யக் கோரியும் நீதிமன் றத்தில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி சார்பில் முன் னாள் மாவட்டச் செயலாளர் கே.எஸ்.அர்ச்சுனன் மனு தாக்கல் செய்துள்ளார்.

நீதிமன்றத்தில் வழக்கு

அதன் விபரம் வருமாறு: சுற்றுச்சூழல் விதிமுறை களை மீறியும் சுற்றுச்சூழ லுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையிலும் ஸ்டெர்லைட் ஆலை இயங்குவதற்கான அனுமதி காலாவதியான பிறகும் சட்டவிரோதமாக இயங்கி வந்த ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி 2018 மே 22ஆம்  தேதி மாவட்ட ஆட்சியர் அலு வலகம் முன்பு அமைதியாக போராடியவர்கள் மீது எந்த வித முன்னறிவிப்புமின்றி காவல்துறையினர் காட்டு மிராண்டித்தனமாக துப்பாக்  கிச் சூடு நடத்தியதில் 13 பேர்  ஈவு இரக்கமின்றி கொல்லப் பட்டனர். இச்சம்பவம் நாடு  முழுவதும் பெரும் அதிர் வலைகளை ஏற்படுத்தியது. இதில் சம்பந்தப்பட்ட காவல் துறையினர், வருவாய்த் துறையினர் மீது கொலை வழக்கு உள்ளிட்ட பிரிவு களில் முதல் தகவல் அறிக்கை  பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென மார்க்  சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி  சார்பில் முன்னாள் மாவட்டச்  செயலாளர் கே.எஸ்.அர்ச்சு னன் சிபிஐக்கு புகார் மனு அனுப்பி வைத்தார்.

சிபிஐயின் காலதாமதம்

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை கோரி யும் இதற்கு காரணமான சம்பந்தப்பட்ட காவல்துறை யினர், வருவாய்த் துறை யினர் மீது கொலை வழக்குப்  பதிவு செய்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மார்க்  சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்  பில் மனு தாக்கல் செய்யப் பட்டது. இதனை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற மதுரைகிளை சிபிஐ விசா ரணைக்கும் புகார் மனு மீது முதல் தகவல் அறிக்கைபதி யுமாறும் உத்தரவிட்டது. ஆயினும் துப்பாக்கிச் சூடு  சம்பவத்திற்கு காரணமான வர்கள் மீது வழக்குப் பதிவு  செய்யாமல் சிபிஐ காலதாம தம் செய்து வந்தது. நீதி மன்ற உத்தரவுப்படி சிபிஐ  வழக்கு பதிவு செய்யாததை ஆட்சேபித்து நீதிமன்ற அவ மதிப்பு வழக்கும் தொடரப்பட்  டது. அதன் பிறகு தான் புகார்  மனுவின் பேரில் முதல் தக வல் அறிக்கையை பதிவு செய் தது.

குற்றவாளி ஒரே ஒரு அதிகாரியா?

இந்நிலையில் சிபிஐ விசாரணை அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்  ததில் தூத்துக்குடி துப்பாக் கிச் சூடு சம்பவத்திற்கு கார ணமான குற்றவாளியாக காவல்துறை அதிகாரி ஒரு வரை மட்டுமே குறிப்பிட்டுள்  ளது. சிபிஐ விசாரணை அறிக்  கையை ஆட்சேபித்தும் மறு  விசாரணை நடத்தக் கோரி யும் சம்பந்தப்பட்ட காவல்  துறையினர், வருவாய் துறை யினர் அனைவர் மீதும் கொலை வழக்கு உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில்  மதுரை சிபிஐ நீதிமன்றத்தில் புதன் (ஜுன் 7) அன்று பதில்  மனு தாக்கல் செய்யப்பட் டது. இது தொடர்பாக வரும் ஜூன் 21ம் தேதி விசாரணை தொடங்க உள்ளது. இவ்  வழக்கில் சிபிஎம் சார்பில்  வழக்கறிஞர்கள் ஷாஜிசெல்  வன், சுப்புமுத்துராமலிங்  கம், புகார்தாரர் கே.எஸ்.அர்ச்சுனன் ஆகியோர் ஆஜ ராகினர்.

 

;