சேலம், மே 1 மேட்டூர் அணையின் நீர் மட்டம் ஞாயிறன்று (மே 1) 105. 50 அடியாக இருந்தது. அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 1539 அடியாக சரிந்து உள்ளது. சனிக்கிழமை 105.52 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் 105.50 அடியாக குறைந்துள்ளது. நீர்இருப்பு 72.15 டிஎம்சியாக உள்ளது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1,500 கன அடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. காவிரியின் நீர்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவும் தொடர்ந்து குறைந்து வருகிறது என பொதுப்பணித்துறையினர் தெரிவித்தனர்.