states

img

தமிழகம் முழுவதும் விவசாயத் தொழிலாளர்கள் போராட்டம்

சென்னை, ஜுன் 28-  கொரோனா பெருந்தொற்று காலம் துவங்கி கிராமப்புற வேலை யின்மை பன்மடங்கு அதிகரித்துள் ளது. இந்நிலையில்  நூறுநாள் வேலைத்திட்ட நாட்களை 150 நாட் களாகவும், தினக்கூலியை ரூ.381 ஆகவும் தமிழக அரசு உயர்த்திட கோரி ஜூன் 28 செவ்வாயன்று மாநி லம் முழுவதும் அகில இந்திய விவ சாயத் தொழிலாளர் சங்கம் சார்பில் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. இதில் ஆயிரக்கணக்கா னோர் பங்கேற்றனர்.  மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைத்திட்டத்தை ஒன்றிய பாஜக அரசு 8 ஆண்டுகளாக சிதைத்து வரு கிறது. கடந்த காலங்களில் தமிழ கத்தில் ஆட்சியில் இருந்த அதிமுக அரசும் இத்திட்டத்தை ஆளுங்கட்சி காரர்களின் கொள்ளைக்காடாக மாற்றியது. அதே நிலை தற்போதும் தொடர்கிறது. இதைத்  தமிழக அரசு உடனடியாக தலையிட்டு தடுத்து  நிறுத்திட வேண்டும்.

தேர்தல் வாக்குறுதியில் சொன்னதைப் போல வேலைநாட்களை 150 நாட்களாக உயர்த்திட  வேண்டும். விலை வாசி அதிகரித்துள்ள சூழலில் தினக்கூலியை 281 ரூபாயிலிருந்து மாநில அரசு ரூ.100  சேர்த்து ரூ.381 ஆக முழுமையாக தினக்கூலி யை வழங்க வேண்டும். ஊரக வேலைத்திட்ட நிதியை எந்தக் காரணத்திற்காகவும் வேறு துறைகளின் பயன்பாட்டிற்கு எடுத்துப் பயன்  படுத்தக்கூடாது. இந்த நிதி முழுவதும் பயனா ளிகளின் கூலிக்காக செலவிட வேண்டும்.  வேலைத்தளத்திற்கு காலை 7 மணிக்கு வர வேண்டுமென்பதை கைவிட வேண்டும். தாலிக்குத் தங்கம் வழங்கும் திருமண நிதி  உள்ளிட்டத் திட்டங்கள் தொடர்ந்திட வேண் டும் என்பன உள்ளிட்டக் கோரிக்கைகளை வலியுறுத்தி ஜூன் 28 அன்று  மாநிலம் முழு வதும் 200க்கும் மேற்பட்ட ஊராட்சி ஒன்றிய  அலுவலகங்களில் பெருந்திரள் ஆர்ப்பாட் டத்தை அகில இந்திய விவசாயத் தொழிலா ளர்கள் சங்கம் நடத்தியது. 

போராட்டத்தில் 30 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர். சங்கத்  தின் மாநிலத் தலைவர் ஏ.லாசர் விருது நகர் மாவட்டம் ராஜபாளையத்திலும், பொதுச்செயலாளர் வீ.அமிர்தலிங்கம் திரு வாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியிலும், பொருளாளர் எஸ்.சங்கர் திருச்சி மாவட்டம் அந்தநல்லூர் ஊராட்சி ஒன்றிய அலுவல கங்கள் முன்பாகவும் நடைபெற்ற ஆர்ப்பாட்  டங்களில் கலந்து கொண்டனர்.

;