பெய்ஜிங், ஜூன் 11- ஜுன் 11ஆம் நாள் சீனாவின் பண் பாடு மற்றும் இயற்கை மரபுச் செல்வத் தினமாகும். தேசிய வனவியல் மற்றும் புல்வெளி நிர்வாகத்திலிருந்து 11ஆம் நாள் கிடைத்த தகவலின் படி, தற்போதுவரை, சீனாவின் உலக இயற்கை மரபுச் செல்வங்களின் எண்ணிக்கை 14 ஆகும். இயற்கை மற்றும் பண்பாட்டு மரபுச் செல்வங்க ளின் எண்ணிக்கை 4 ஆகும். இவ்விரு எண்ணிக்கைகளும் உலகளவில் முதலி டத்தை வகிப்பது குறிப்பிடத்தக்கது. தேசிய வனவியல் மற்றும் புல் வெளி நிர்வாகத்தின் பொறுப்பாளர் ஒருவர் கூறுகையில், சீனாவில் 56 உலக மரபுச் செல்வங்கள் உள்ளன. அவற்றின் மொத்த பரப்ப ளவு 70 ஆயிரத்து 600 சதுர கிலோ மீட்டராகும். இந்த மரபுச் செல்வங்க ளின் மூலம், சீனத் தேசத்தில் மிகப் பெரிய பிரதிநிதித்துவம் வாய்ந்த நிலவியல் சிதிலங்கள், மிக அழகிய மலைகள், காடுகள், ஏரிகள், மிக அரி தான விலங்குகள், தாவரங்கள் ஆகி யவை பயனுள்ள முறையில் பாது காக்கப்பட்டு வருகின்றன என்று தெரி வித்தார். மேலும், சீனாவிலுள்ள மரபுச் செல்வங்களின் பாதுகாப்பு நிலை மை சீராக இருந்து, உலகின் சராசரி யை விட சிறப்பான இடத்தில் உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.