states

ஞானவாபி மசூதியில் சங்பரிவாரங்களின் சதிச்செயலுக்கு தமிழக மக்கள் ஒற்றுமை மேடை கண்டனம்

சென்னை, மே 18- தமிழக மக்கள் ஒற்றுமை மேடையின் மாநில செயற்பாட்டுக்குழு கூட்டம் எஸ்.கே.எம். ஒருங்கிணைப்பாளர் கே.பாலகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது. ஒருங்கிணைப்பாளர்கள் பேராசிரியர் அருணன், க.உதயகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட்டன.  அயோத்தியில் இருந்த பாபர் மசூதி யில் ராமர் பிறந்தார் எனும் கட்டுக்கதை யைக் கிளப்பிவிட்டு, அங்கு கள்ளத்தன மாக ராமர் சிலையை வைத்து முடிவில் மசூதியையே இடித்து தகர்த்து விட்  டார்கள் பாஜக உள்ளிட்ட ஆர்எஸ்எஸ் பரிவாரத்தினர். இந்த நிலையில் வாரணாசியில் உள்ள ஞானவாபி மசூதி யைக் கைப்பற்றி இடிக்கவும் சதித்  திட்டம் தீட்டிவிட்டது சங் பரிவாரம்.  அங்கு சிவ லிங்கம் கண்டெடுக்கப்பட்ட தாகக் கிளப்பி விடப்படுகிறது. அது  கண்டெடுக்கப்பட்ட இடத்தை பூட்டி சீல்  வைக்க நீதிமன்றமும் உத்தரவிட்டிருப்ப தாகச் சொல்லப்படுகிறது. இதுவெல் லாம் மற்றொரு மசூதி இடிப்புக்கு அச் சாரம் போடப்படுவதைக் காட்டுகிறது.  அதாவது மற்றொரு மதவெறியாட்  டத்திற்கு நாட்டை தயார்ப்படுத்துவ தாகத் தெரிகிறது. தமிழக மக்கள் ஒற் றுமை மேடை இந்தக் கொடூர சதி விளை யாட்டை வன்மையாகக் கண்டிக்கிறது.  தனது எட்டு ஆண்டு கால ஆட்சியில் மோடி அரசு செய்தவையெல்லாம்  பெரும் பொருளாதாரக் கேடுகளே. இத னால் பாதிக்கப்பட்டவர்கள் இந்துக் களும்தான். அந்த உண்மையை மறைக்கவே மற்றொரு மசூதி விவகா ரத்தை கிளப்புகிறது பாஜக என்பதை இந்துக்கள் உள்ளிட்ட அனைத்து மக்க ளும் உணர்ந்து, இந்த சதி வேலைக்கு பலியாகாமல் சமூக நல்லிணக்கத்தை பேண வேண்டும்

சமூக நல்லிணக்கக் குழுக்களை அமைத்திடுக!

மதவெறி சக்திகள் தங்களது பேச்சா லும், செயலாலும் சமூக நல்லிணக் கத்தை கெடுக்கத் தீவிரமான முயற்சி களைத் தமிழ்நாட்டிலும் செய்து வரு கின்றன. சட்டம் ஒழுங்குப் பிரச்சனை யாகக் கருதி அவற்றை தடுக்க காவல் துறை மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமே. கூடவே, சிவில் சமூகத்தின் மனசாட்சியை தட்டி யெழுப்பும் ஏற்பாடுகளையும் அரசு மேற்கொள்ள வேண்டும். அது வருமுன்  காப்பதாக அமையும். மாணவிகள் ஹிஜாப் அணியக் கூடாது போன்ற விவகாரங்களை சங் பரி வாரத்தினர் தமிழ்நாட்டிலும் கிளப்பி மதப் பகைமைகளை மூட்டப் பார்க்கி றார்கள். இந்த அடாவடித் தனங்களைத் தடுக்க சமூக நல்லிணக்கத்தில் நம் பிக்கை கொண்ட பல மதத்தவர் மற்றும் மதச்சார்பற்றவர்களைக் கொண்ட சமூக நல்லிணக்கக் குழுவை மாவட்டம் தோறும் அமைக்க வேண்டும் என்று  முதல்வர் அவர்களை மேடை கேட்டுக் கொள்கிறது. இது மக்கள் ஒற்றுமை யை வலுப்படுத்த உதவும், மதவெறி சக்திகளின் சதி வேலைகளை முளை யிலேயே கிள்ளி எறிய வழி வகுக்கும் என்பதை மேடை உரிமையோடு சுட்டிக்  காட்டுகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட் டுள்ளது.

முதல்வருக்கு மனு

இதனிடையே தமிழகத்தில் மாவட்டம் தோறும் சமூக நல்லிணக்கக் குழுக்களை உருவாக்க வேண்டும் என வலியுறுத்தி தமிழக முதல்வருக்கு தமிழக மக்கள் ஒற்றுமையின் மேடை கடிதம் எழுதியுள்ளது. அக்கடிதத்தை ஒருங்கிணைப்பாளர் பேரா.அருணன், க.உதயகுமார், பொருளாளர் ஞானகுரு ஆகியோர் புதனன்று தலைமை செய லகத்தில் முதல்வரின் தனிப் பிரிவு செய லாளர்களிடம் வழங்கினர்.