states

மாநில அரசுகள் நிர்வகிக்கும் கோயில்களில் நிதி முறைகேடா; ஆதாரம் இருக்கிறதா?

புதுதில்லி, செப். 2 - மாநில அரசுகள் நிர்வகிக்கும் கோயில்களில் நிதி முறைகேடுகள் நடப்பதாக பாஜக-வினர் தொடர்ந்த வழக்குகளில், குற்றச்சாட்டிற்கு ஆதாரம் என்ன இருக்கிறது? என்று உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பி யுள்ளது. இந்துக்கள் மற்றும் ஜெயின்களின் மதக் கோயில்களை அவர்களே நிர்வகிக்க உரிமை வழங்கக் கோரி, பாஜக-வைச் சேர்ந்த வழக்கறிஞர் அஸ்வினி உபாத்யாய, ஜீதேந்திர சரஸ்வதி ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனுக்களைத் தாக்கல் செய்திருந்தனர். “முஸ்லிம், பார்சி, கிறிஸ்த வர்களை போல இந்து, ஜெயின், புத்த, சீக்கியர்களுக்கும் வழிபாட்டுத்  தலங்களின் அசையும், அசையா சொத்துகளை நிர்வகிக்க உரிமை வழங்க வேண்டும். இதுபோன்ற உரிமைகளை அரசு பறிக்கக் கூடாது. ஆனால், 18 மாநில அரசுகள், இந்து, ஜெயின், புத்த,  சீக்கியர்களுக்கான வழிபாட்டுத் தலங்களை தங்களது கட்டுப்பா ட்டில் வைத்துள்ளன. எனவே, இந்து,  ஜெயின், புத்த, சீக்கியர்களுக்கான வழிபாட்டுத்தலங்களை நிர்வகிக்க உருவாக்கப்பட்டுள்ள மாநில சட்டங்கள் தன்னிச்சையானவை, அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானவை என அறிவிக்க வேண்டும். நாடு முழுவதும் உள்ள அனைத்து மத வழிபாட்டுத் தலங்களையும் நிர்வகிக்க ஒரே  மாதிரியான அறநிலைய சட்டங் களை உருவாக்க ஒன்றிய அரசுக்கோ, இந்திய சட்ட ஆணை யத்துக்கோ உத்தரவிட வேண்டும்.

கேரளா, தமிழ்நாடு, ஆந்திரா போன்ற மாநிலங்களில் உள்ள  வழிபாட்டுத்தலங்கள் கடவுள் மறுப்பாளர்களால் நிர்வகிக்கப்படு வது முரணாக உள்ளது. வழிபாட்டுத் தலங்களின் நிதி ஆதாரங்களை மாநில அரசுகள் சீரழித்துள்ளன. திருப்பதி, குருவாயூர், சித்தி விநாயக், வைஷ்ணவதேவி கோவில்களில் கிடைக்கும் வருவாய் ஆளும்கட்சியினருக்கு பயன்பட்டு வருகிறது” என்றும் குற்றச்சாட்டுக்களை அடுக்கி யிருந்தனர். இந்த மனுக்கள் தலைமை நீதிபதி யு.யு. லலித் தலைமை யிலான அமர்வு முன் வியாழனன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அஸ்வினி உபாத்யாய, ஜீதேந்திர சரஸ்வதி சார்பில் மூத்த வழக்கறிஞர்கள் கோபால் சங்கர நாராயணன், அரவிந்த் தத்தர் ஆஜராகி வாதங்களை முன்வைத்தனர். அப்போது, “மாநில அரசுகள் நிர்வகிக்கும் கோயில்களில் நிதி முறைகேடுகள் நடந்துள்ளன என்ப தற்கு ஏதேனும் ஆதாரங்கள் உள்ள னவா? மேலும், கர்நாடகாவில் பதினைந்தாயிரம் கோயில்கள் மூடப்பட்டதாக கூறுகிறீர்களே, அதற்கு அதிகாரப்பூர்வ தகவல் ஏதேனும் உள்ளதா?” என கேள்வி எழுப்பினர். மேலும், அவ்வாறு ஆதாரங்கள் ஏதேனும் இருந்தால் அதனை விரிவான மனுவாக தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்ட நீதிபதி கள், “தற்போது தாக்கல் செய்யப் பட்டுள்ள மனுக்களில் வெறும் குற்றச்சாட்டுகள் மட்டுமே உள்ளன, உறுதியான ஆதாரங்கள் ஏதும் இல்லை” எனவும் கூறிவிட்டனர்.