states

சட்டவிரோதமாக மரம் வெட்டுதல் ஒன்றிய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

மலைப்பிரதேசங்களில் நிலவும் சுற்றுச்சூழல் சீர்கேடு தொ டர்பான பொதுநல வழக்கு வியாழக்கிழமை அன்று உச்சநீதிமன் றத்தில் தலைமை நீதிபதி பிஆர்.கவாய், நீதிபதி வினோத் சந்திரன் அடங்கிய அமர்வு விசாரணைக்கு வந்தது. வாதங்களுக்குப் பிறகு உச்சநீதிமன்ற நீதிபதிகள்,”சட்டவிரோதமாக மரம் வெட்டுதல் தொடர்ந்தால் காடுகளே இருக்காது. சட்டவிரோத மரங்கள் வெட்டப்படுவது தொடர்பாக ஒன்றிய அரசும், சம்பந்தப்பட்ட இமாச்சலப் பிரதே சம், உத்தரகண்ட், பஞ்சாப் மாநில அர சுகளும் 2 வாரங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். பஞ்சாப், உத்தராகண்ட், இமாச்சலப் பிரதேசத்தில் ஏற்பட்ட மழை, வெள்ளம் மற்றும் நிலச் சரிவு பாதிப்பு எதிர்பாராதது. இமாச்சலப் பிரதேச பாதிப்பு தொடர்பான ஊடகச்  செய்திகளில் வெள்ளத்தில் வெட்டப்பட்ட  மரங்கள் அதிகளவில் மிதப்பதை காணமுடிந்தது. இதிலிருந்து இப்பகு திகளில் சட்டவிரோதமாக மரங்கள் வெட்டப்படுவது தெள்ளத்தெளிவாகப் புலப்படுகிறது. இப்படியே சென்றல் இனி காடுகளே இருக்காது. ஒன்றிய அரசின் கூடுதல் சொலிசிடர் ஜெனரல் துஷார் மேத்தா சம்பந்தப்பட்ட அதிகாரிகளை தொடர்பு கொண்டு, வெள்ளத்தில் இவ்வளவு அதிகளவில் வெட்டப்பட்ட மரக்கட்டைகள், மரங்கள் மிதந்ததற்கான காரணத்தை அறிய வேண்டும்” என அறிவுரை வழங்கினார்.