states

தீக்கதிர் விரைவு செய்திகள்

  1. சென்னை டிபிஐ வளா கத்தில் பள்ளிகள் திறக் கப்பட உள்ள நிலையில் மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்து ஜூன் 2-ல் 20 ஆசிரியர் சங்கங்களுடன் பள்ளிக்கல்வித் துறை  ஆலோசனை நடத்த வுள்ளது.
  2. அந்தமான் மற்றும் நிக்கோ பர் தீவுகளில் உள்ள திக்லி பூரிலிருந்து 55 கிலோ மீட்டர் தொலைவில் வெள்ளியன்று ரிக்டர் அளவுகோலில் 4.3 ஆக நிலநடுக்கம் பதிவாகியுள் ளது என்று தேசிய நில  அதிர்வு மையம் தெரி வித்துள்ளது.
  3. தமிழகத்தின் மேல் நில வும் வளி மண்டல கீழ டுக்கு சுழற்சி மற்றும் வெப் பச்சலனம் காரணமாக, அடுத்த 4 நாள்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப் புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து ள்ளது.
  4. தமிழகத்தில் காடுகளின் பரப்பளவை 33 சதவீத மாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று வனத் துறை அமைச்சர் கா.ராம சந்திரன் தெரிவித்துள் ளார்.
  5. தமிழகத்தில் கொரோனா பரவாமல் தடுக்க மாவட்ட ஆட்சியர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சுகாதாரத்துறை செயலாளர் ஜெ.ராதா கிருஷ்ணன் மாவட்ட ஆட்சியர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
  6. தெலங்கானா மாநிலம் ஜோகுலம்பா-கட்வால் மாவட்டத்தில் 17 பெண் களை ஏமாற்றிக் கொன்ற சீரியல் கில்லருக்கு ஆயுள் தண்டனை விதித்து அம்மாநில நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
  7. ஹரியானா முன்னாள் முதல்வர் ஓம் பிரகாஷ் சவு தாலா முறைகேடாக ரூ.6.09 கோடி சொத்து சேர்த்த வழக்கில் அவ ருக்கு 4 ஆண்டுகள் சிறை  தண்டனையும் ரூ.50 லட்சம் அபராதமும் விதித்து சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 
  8. இந்திய ராணுவம் மற்றும் ஜம்மு-காஷ்மீர் காவல்துறை இணைந்து நடத்திய கூட்டு நட வடிக்கையில் இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதாக அதி காரிகள் தெரிவித்தனர். 
  9. லடாக்கில் உள்ள துர்துக் பகுதியில் கட்டுப் பாட்டை இழந்த வாகனம் ஆற்றில் பாய்ந்து விபத்திற் குள்ளானதில் இந்திய ராணுவத்தினர் 7 பேர் பலியாகினர். சில ராணுவ வீரர்கள் காயமடைந்தனர்.
  10. அமெரிக்காவின் ஏழு மாநி லங்களில் 9 பேருக்கு குரங்கு அம்மை ஏற்பட்டு ள்ளதாக அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் (சிடிசி) தெரிவித்துள்ளது. உல களவில் 20 நாடுகளைச் சேர்ந்த 250 பேருக்கு குரங்கு அம்மை நோய் பரவியுள்ளதாக உலக சுகா தார அமைப்பு தெரி வித்துள்ளது.
  11. காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை குறை ந்து வருவதால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வெள்ளியன்று  காலை  வினாடிக்கு 8,058 கன அடியாகக் குறைந்தது.
  12. பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென் ஆப்பிரிக்கா ஆகிய ஐந்து நாடுகள் இடம் பெற்றுள்ள பிரிக்ஸ் அமைப்பில் சேர சவூதி அரேபியாவும், அர்ஜெண்டினாவும் விரும்புவதாக ரஷ்யாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரவ் தெரிவித்துள்ளார். அடுத்த கட்ட கூட்டத்திற்காக பிரிக்ஸ் தயாராகிக் கொண்டிருக்கும் நிலையில், மேலும் பல நாடு களை அந்தக் கூட்டத்தில் பங்கேற்கச் செய்யும் பணிகள் நடந்து  கொண்டிருக்கின்றன. பார்வையாளர் அந்தஸ்துடன் கூட்டத்தில் பங்கேற்க அர்ஜெண்டினா ஏற்கனவே ஒப்புக் கொண்டுள்ளது.
  13. ஆறு நாட்களில் புதிய தேர்தலுக்கான தேதியை அறிவிக்கா விட்டால் மீண்டும் லட்சக்கணக்கான மக்களுடன் தலைநகரில் பெரும் பேரணியை நடத்துவேன் என்று பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் அறிவித்திருக் கிறார். அவரது கட்சி சார்பில் தலைநகர் இஸ்லாமாபாத்தில் நடந்த பேரணியில் ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்றனர். அதில்  பேசிய அவர், தேவைப்பட்டால் தேர்தல் அறிவிப்பு வெளியாகும் வரையில், இதே இடத்தில் அமர்ந்திருக்கத் தயார் என்று குறிப்பிட்டார்.
  14. கொரோனா பெருந்தொற்றால் ஏற்பட்ட பாதிப்பில் இருந்து மீளுவதற்குள் உக்ரைன் நெருக்கடி வந்து  விட்டது என்று அர்ஜெண்டினாவின் ஜனாதிபதி ஆல்பெர்ட்டோ  பெர்னாண்டஸ் குறிப்பிட்டிருக்கிறார். வடக்குப் பகுதி போரை உருவாக்குகிறது. அதில் தென் அமெரிக்கா கடும் பாதிப்புக்கு உள்ளாகிறது என்ற அவர், இது போன்ற அநீதிகளை எவ்வளவு நாட்களுக்கு வெறும் பார்வையாளர்களாக இருந்து பார்த்துக் கொண்டிருக்க முடியும் என்று கேள்வி எழுப்பினார்.
;