states

எக்ஸ்பிரஸ் ரயில் சேவையில் மாற்றம்: தெற்கு ரயில்வே அறிவிப்பு

சென்னை, மே 21 - பராமரிப்பு பணி காரணமாக எக்ஸ்பிரஸ் மற்றும் மின்சார ரயில்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி, நெல்லூர்-சூலூர் பேட்டை இடையே காலை 10.15 மணிக்கும், சூலூர்பேட்டை-நெல்லூர் இடையே காலை 7.50 மணிக்கும், சென்னை எம்.ஜி.ஆர் சென்ட்ரல்-சூலூர்பேட்டை இடையே காலை 5.20 மணிக்கும், சூலூர்பேட்டை-சென்ட்ரல் இடையே மதியம் 12.35 மணிக்கும், ஆவடி-சென்டிரல் இடையே காலை 4.25 மணிக்கும் இயக்கப்படும் மின்சார  ரயில்கள் முழுவதுமாக ரத்து செய்யப் படுகிறது. திருப்பதி-சென்ட்ரல் (வண்டி எண்:16054) இடையே காலை 10.10 மணிக்கும், எம்.ஜி.ஆர் சென்டிரல்-திருப்பதி (16053) இடையே மதியம் 2.15  மணிக்கும் இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரயில்கள் வருகிற 24, 25, 31 ஆம் தேதி,  ஜூன் மாதம் 1,7,8 ஆம் தேதிகளில் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது. விஜயவாடா-சென்ட்ரல் (12711) இடையே காலை 6.10 மணிக்கு இயக்கப்படும் பினாகினி எக்ஸ்பிரஸ் ரயில் வருகிற 24 ஆம் தேதி கூடூர்-சென்ட்ரல் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. மறுமார்க்கமாக சென்ட்ரல்-விஜயவாடா (12712) இடையே மதியம் 2.10 மணிக்கு புறப்படும் பினாகினி எக்ஸ்பிரஸ் ரயில்  வருகிற 24 ஆம் தேதி சென்ட்ரல்-கூடூர்  இடையே பகுதியாக ரத்து செய்யப்படு கிறது. இந்த ரயில் கூடூரிலிருந்து மாலை 4.20 மணிக்கு இயக்கப்படும்.

பல்லவன்

காரைக்குடி-எழும்பூர் (12606) இடையே அதிகாலை 5.30 மணிக்கு இயக்கப்படும் பல்லவன் எக்ஸ்பிரஸ் ரயில் வருகிற ஜூன் மாதம் 1 ஆம் தேதி செங்கல்பட்டு-எழும்பூர் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. எழும்பூர்-மதுரை (12635) இடையே மதியம் 1.50 மணிக்கு புறப்படும் அதிவேக எக்ஸ்பிரஸ் ரயில் வருகிற ஜூன் மாதம் 1 ஆம் தேதி எழும்பூர்-செங்கல்பட்டு இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயில் செங்கல்பட்டிலிருந்து மதியம் 2.50 மணிக்கு இயக்கப்படும். பெங்களூரு-சென்ட்ரல் (12608)  இடையே காலை 6.20 மணிக்கு இயக்கப் படும் லால்பாக் எக்ஸ்பிரஸ், கோவை-சென்ட்ரல் (12680) இடையே காலை 6.15 மணிக்கு இயக்கப்படும் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ், மைசூரு-சென்ட்ரல் (12610) இடையே அதிகாலை 5.00 மணிக்கு இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரயில்கள் வருகிற 24, 25, 31 ஆகிய தேதி மற்றும் ஜூன் மாதம் 1, 7, 8  ஆம் தேதிகளில் காட்பாடி-சென்ட்ரல் இடையே பகுதியாக ரத்து செய்யப்படு கிறது.

இன்டர்சிட்டி

சென்ட்ரல்-பெங்களூரு (12607) இடையே மதியம் 3.30 மணிக்கு புறப் படும் லால்பாக் எக்ஸ்பிரஸ் ரயில் வருகிற 24, 25, 31 ஆம் தேதி மற்றும் ஜூன் மாதம் 1, 7, 8 ஆம் தேதிகளில் சென்டிரல்-காட்பாடி இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயில் காட்பாடியில் இருந்து மாலை 5.35 மணிக்கு இயக்கப்படும். சென்ட்ரல்-மைசூரு (12609) இடையே மதியம் 1.35 மணிக்கு புறப்படும் எக்ஸ்பிரஸ் ரயில் வருகிற 24, 25, 31 ஆம் தேதி மற்றும் ஜூன் மாதம்  1, 7, 8 ஆம் தேதிகளில் சென்ட்ரல்-காட்பாடி இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயில் காட்பாடியில் இருந்து மதியம் 3.45 மணிக்கு இயக்கப்படும். சென்ட்ரல்-கோவை (12679) இடையே மதியம் 2.30 மணிக்கு புறப்படும் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில் வருகிற 24, 25, 31 ஆம் தேதி  மற்றும் ஜூன் மாதம் 1, 7, 8 ஆம் தேதிக ளில் சென்ட்ரல்-காட்பாடி இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயில் காட்பாடியில் இருந்து மாலை 4.20 மணிக்கு இயக்கப்படும். சென்ட்ரல்-சாய்நகர் சீரடி (22601) இடையே காலை 10.20 மணிக்கு இயக் கப்பட்டு வரும் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில் வருகிற 25 ஆம் தேதி மற்றும் ஜூன் மாதம் 1, 8 ஆகிய தேதிகளில் 2 மணி 25 நிமிடம் தாமதமாக மதியம் 12.45 மணிக்கு புறப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.