பழனி, ஏப்.1- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பழனி ஏரியாக் குழு உறுப்பினராக செயல்பட்ட மூத்த தோழர் பாப்பம்பட்டி கவுண்டன் (எ) பழனிச்சாமி (வயது 82) புதனன்று காலமானார். இவர், மூத்த தலைவர்கள் ஆர்.ராமராஜ், வி.ஏ.கருப்புசாமி ஆகியோருடன் இணைந்து நெய்க்காரபட்டி ஜமீன் நிலப் போராட்டத்தில் பங்கேற்று உச்ச வரம்பு சட்டத்தின் கீழ் நிலமற்ற ஏழை, எளிய மக்களுக்கு நிலங்களை பெற்றுக் கொடுத்தவர். சாஸ்தா மில் போராட்டத்தில் தொழிலாளர் களுக்கு ஆதரவாக போராடியவர். அன்னாரது மறைவு செய்தியறிந்து கட்சியின் திண்டுக்கல் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் அருள்செல்வன், வ.ராஜ மாணிக்கம், ஒன்றிய செயலாளர் செல்வராஜ், ஈஸ்வரன், பெரியசாமி உள்ளிட்டோர் அவரது உடலுக்கு மாலையணி வித்து அஞ்சலி செலுத்தினர்.