states

தரமற்ற ஷவர்மா விற்பனை: அமைச்சர் எச்சரிக்கை

சென்னை,மே 8- “நம் நாட்டு உணவுகளை மக்கள் விரும்ப வேண்டும். சுகாதாரமற்ற ஷவர்மா விற்பனை செய்தது தெரியவந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என அமைச்சர் மா.சுப்பிரமணியன் எச்சரிக்கை விடுத்துள்ளார். சேலம் அஸ்தம்பட்டி அருகே உள்ள சி.எஸ்.ஐ பாலிடெக்னிக் கல்லூரியில் தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இதில் சுகாதா ரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் கலந்துகொண்டு முகாமை தொடங்கி வைத்து தடுப்பூசி போடும் பணியை பார்வையிட்டார். அதன் பிறகு செய்தியாளர்களிடம் கூறும்போது சமீபத்தில் கேரளா மாநிலத்தில் ஷவர்மா சாப்பிட்ட மாணவி உயிரி ழந்துள்ளார். இதன் தொடர்ச்சி யாக தமிழகம் முழுவதும் ஷவர்மா விற்பனை செய்யப்படும் உணவகங்களில் ஆய்வு மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நம் நாட்டு உணவுகளை மக்கள் விரும்ப வேண்டும். ஷவர்மா விற்பனை செய்யப் படும் கடைகளில் தரமானதாக உள்ளதா அங்கு இறைச்சிகள் பதப்படுத்தும் வசதிகள் இருக்கி றதா என்பது குறித்து தமிழகம் முழுவதும் உணவகங்களில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆய்வின் அடிப்ப டையில் சுகாதாரமற்ற ஷவர்மா விற்பனை செய்தது தெரிய வந்தால் கடும் நடவடிக்கை எடுக்க ப்படும் என்றும் கேரளாவை போன்று தமிழகத்திலும் ஷவர்மாவை தடை செய்திட முடிவு செய்து வருவதாகவும் அவர் தெரி வித்தார்.