இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரி யத்தின் (பிசிசிஐ) தலைவராக இருந்த கங்குலியின் பதவிக்காலம் கடந்தாண்டு முடிவடைந்த நிலையில், 2022 அக்டோபர் மாதம் ரோஜர் பின்னி புதிய பிசிசிஐ தலைவராக தேர்ந்தெடுக் கப்பட்டார். ஒன்றிய உள்துறை அமைச் சர் அமித்ஷா மகன் ஜெய் ஷா மீண்டும் பிசிசிஐ செயலாளராக அறிவிக்கப் பட்டார். கங்குலி தலைவராக இருந்த காலத்தில் அமைதியாக இருந்த ஜெய் ஷா தற்போது பிசிசிஐயின் அனைத்து பிரிவுகளிலும் ஆதிக்கம் செலுத்தி வருகிறார். கிட்டத்தட்ட ஒன்றிய ஆட்சி அரசியல் ஆதரவால் ஜெய் ஷா பிசிசிஐ நிர்வாகத்தை தனது கட்டுப் பாட்டில் வைத்துள்ள நிலையில், முக்கிய அறிவிப்புகள், முக்கிய நிகழ்வுக ளின் தலைமை, பரிசு வழங்கும் இடம், சிறப்பு வரவேற்பாளர் என அனைத்து இடங்களிலும் ஜெய்ஷா தலை தான் தெரிகிறது. ஆனால் ரோஜர் பின்னி எந்த அறிவிப்பும், எந்த நிகழ்வுகளிலும் வரு வதில்லை. பெயரளவில் மட்டும் தலைவர் பொறுப்புடன் ரோஜர் பின்னி காணாத இடத்தில் உளளார். புரியும்படி சொன்னால் ஜெய் ஷா ஆதிக்கத்தால் பிசிசிஐ நிர்வாகத்தில் ரோஜர் பின்னியை காண வில்லை என்றுதான் கூற வேண்டும்.
ஐபிஎல் இன்னும் 13 நாட்கள்
கேப்டன்கள் பட்டியல்
சென்னை (தமிழ்நாடு) - தோனி (இந்தியா)
குஜராத் - ஹர்திக் பாண்டியா (இந்தியா)
மும்பை (மகாராஷ்டிரா) - ரோகித் சர்மா (இந்தியா)
ஹைதராபாத் (ஆந்திரா, தெலுங்கானா) - மார்க்ரம் (தென் ஆப்பிரிக்கா)
தில்லி - டேவிட் வார்னர் (ஆஸ்திரேலியா)
பெங்களூரு (கர்நாடகா) - டு பிளெஸ்சிஸ் (தென் ஆப்பிரிக்கா)
கொல்கத்தா (மேற்கு வங்கம்) - ஷ்ரேயஸ் (இந்தியா)
ராஜஸ்தான் - சஞ்சு சாம்சன் (இந்தியா)
லக்னோ (உ.பி.,) - கே.எல். ராகுல் (இந்தியா)
பஞ்சாப் - ஷிகர் தவன் (இந்தியா)
இன்றைய டபிள்யுபிஎல் ஆட்டங்கள்
மும்பை - உத்தரப்பிரதேசம்
நேரம் : மாலை 3:30 மணி
இடம் : பாட்டில் மைதானம், நவிமும்பை
பெங்களூரு - குஜராத்
நேரம் : இரவு 7:30 மணி
இடம் : பிராபோர்ன் மைதானம், மும்பை
சேனல் : ஸ்போர்ட்ஸ் 18,
ஜியோ சினிமா ஓடிடி (இலவசம்)